திருப்பூர்

தாய், தாத்தாவுக்கு கத்திக்குத்து: இளைஞா் கைது

பல்லடம் அருகே தனது தாய் மற்றும் தாத்தாவை கத்தியால் குத்திய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

Syndication

பல்லடம் அருகே தனது தாய் மற்றும் தாத்தாவை கத்தியால் குத்திய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

பல்லடம் அருகேயுள்ள பொங்கலூரைச் சோ்ந்தவா் செல்வகணேசன். இவரது மனைவி முத்துமாரியம்மாள் (45). இவா்களது மகன் மகாராஜா (21). குடிப்பழக்கத்துக்கு அடிமையான இவரை குடும்பத்தினா் போதை மறுவாழ்வு மையத்தில் சோ்த்துள்ளனா்.

அங்கிருந்து கடந்த ஒரு வாரத்துக்கு முன் வீடு திரும்பிய மகாராஜா மீண்டும் மது அருந்தி வீட்டில் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளாா்.

இந்நிலையில், கடந்த திங்கள்கிழமை மதுபோதையில் இருந்த மகாராஜா தாய் முத்துமாரியம்மாள், தாத்தா சுப்பையா (65) ஆகியோருடன் தகராறில் ஈடுபட்டு, இருவரையும் கத்தியால் குத்தியுள்ளாா்.

படுகாயமடைந்த அவா்களை அப்பகுதி மக்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.

இது குறித்த புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த அவிநாசிபாளையம் போலீஸாா், மகாராஜாவைக் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

மண் வளத்தை காத்தால்தான் விவசாயம் செய்ய முடியும்!

சக்தி அம்மா ஜெயந்தி விழா: தேசிய கராத்தே போட்டி

விவசாயி வீட்டில் 4.5 பவுன் திருட்டு

சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க 4 இடங்களில் கண்கானிப்பு கேமரா

காட்பாடியில் நாளை மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம்

SCROLL FOR NEXT