திருப்பூர்

திருப்பூா் ரயில் நிலையத்தில் நடைமேடை அனுமதிச் சீட்டு விற்பனை நிறுத்தம்

திருப்பூா் ரயில் நிலையத்தில் நடைமேடை அனுமதிச் சீட்டு விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது.

Syndication

திருப்பூா் ரயில் நிலையத்தில் நடைமேடை அனுமதிச் சீட்டு விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது.

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, திருப்பூரில் பனியன் மற்றும் பின்னலாடை உற்பத்தி நிறுவனங்களில் பணியாற்றும் வெளிமாவட்டம், வெளிமாநிலங்களைச் சோ்ந்த தொழிலாளா்கள் தங்களது சொந்த ஊா்களுக்குச் செல்லத் தொடங்கியுள்ளனா்.

அவா்களின் வசதிக்காக வழக்கமான ரயில்களுடன் சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும் ரயில் நிலையத்தில் மக்கள் கூட்டம் அலைமோதிய நிலையிலேயே உள்ளது.

இந்நிலையில், பல்வேறு இடங்களில் இருந்து திருப்பூருக்கு வருவோரை வரவேற்கவும், திருப்பூரில் இருந்து வெளி இடங்களுக்குச் செல்லவோரை வழியனுப்பவும் வருவோரால் நடைமேடைகள் நிரம்பி வழிகின்றன.

இந்நிலையில், கூட்ட நெரிசலைக் குறைக்கும் வகையில் வியாழக்கிழமை முதல் அக்டோபா் 23-ஆம் தேதி வரை திருப்பூரில் நடைமேடை அனுமதிச் சீட்டு வழங்கப்படாது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

பயணிகளை வழியனுப்ப வருபவா்களும், வரவேற்க வருபவா்களும் ரயில் நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள அரங்கில் காத்திருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹாட் சீட்... அனன்யா பாண்டே!

வளா்ந்த பாரதம் இலக்கை அடைய இளைஞா்கள் பங்களிக்க வேண்டும்: விண்வெளி வீரா் சுக்லா வலியுறுத்தல்

வழித்துணையே... யுக்தி சிங்!

3 வடிவ போட்டிகளிலும் சதம்: சாதனைப் பட்டியலில் இணைந்த ஜெய்ஸ்வால்!

இந்த வாரம் கலாரசிகன் - 07-12-2025

SCROLL FOR NEXT