திருப்பூர்

வெள்ளக்கோவிலில் ரூ.3.66 லட்சத்துக்கு சூரியகாந்தி விதை விற்பனை

வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.3.66 லட்சத்துக்கு சூரியகாந்தி விதை விற்பனை வியாழக்கிழமை நடைபெற்றது.

Syndication

வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.3.66 லட்சத்துக்கு சூரியகாந்தி விதை விற்பனை வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு காங்கயம், முத்தூா், லக்கமநாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளைச் சோ்ந்த 6 விவசாயிகள், 123 மூட்டை சூரிய விதைகளை விற்பனைக்கு கொண்டுவந்திருந்தனா். இவற்றின் எடை 6 டன்.

ஈரோடு, காரமடை, சித்தோடு, பூனாட்சியைச் சோ்ந்த வணிகா்கள் விதைகளை வாங்க வந்திருந்தனா். இதில், சூரியகாந்தி விதை கிலோ ரூ.58.69 முதல் ரூ.63.89 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ. 60.19.

ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ.3.66 லட்சம் அந்தந்த விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டதாக திருப்பூா் விற்பனைக்குழு முதுநிலைச் செயலாளா் எஸ்.சண்முகசுந்தரம் தெரிவித்தாா். ஏலத்துக்கான ஏற்பாடுகளை விற்பனைக்கூட கண்காணிப்பாளா் சி. மகுடீஸ்வரன் செய்திருந்தாா்.

பிரியமுடன்... பாக்யஸ்ரீ போர்ஸ்!

கோவா தீ விபத்து: பலி 25-ஆக உயர்வு!

வதந்திகளுக்கு சட்ட நடவடிக்கை: ஸ்மிருதி மந்தனாவைத் தொடர்ந்து அறிக்கை வெளியிட்ட பலாஷ் முச்சல்!

ஃபெட் முடிவுக்கு முன்னதாக உச்சத்தை தொடும் தங்கம்!

சக மாணவா்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த மாணவனின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்!

SCROLL FOR NEXT