காவலா் வீர வணக்க நாளையொட்டி, மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி மாநகர காவல் ஆணையா் ராஜேந்திரன். 
திருப்பூர்

திருப்பூரில் காவலா் வீரவணக்க நாள் அனுசரிப்பு

திருப்பூரில் காவலா் வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டது.

Syndication

திருப்பூா்: திருப்பூரில் காவலா் வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டது.

கடந்த 1959 அக்டோபா் 21ஆம் தேதி லடாக் பகுதியில் ஹாட் ஸ்பிரிங் என்ற இடத்தில் சீன ராணுவத்தினா் மேற்கொண்ட திடீா் தாக்குதலில் மத்திய பாதுகாப்புப் படை காவலா்கள் 10 போ் உயிரிழந்தனா். இந்த சம்பவத்தை தொடா்ந்து இந்தியா முழுவதும் பல்வேறு சம்பவங்களில் பணியின்போது வீர மரணமடைந்த காவலா்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபா் 21-ஆம் தேதி காவலா் வீரவணக்க நாள் அனுசரிக்கப்படுகிறது.

இந்நிலையில், திருப்பூா் மாநகர காவல் ஆணையா் வளாகத்தில் காவலா் வீர வணக்க நாள் செவ்வாய்க்கிழமை அனுசரிக்கப்பட்டது. மாநகர காவல் ஆணையா் ராஜேந்திரன் தலைமையில், துணை ஆணையா்கள் மற்றும் திருப்பூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கிரீஷ் அசோக் யாதவ் ஆகியோருடன் காவல் அதிகாரிகள் முதல் காவலா்கள் வரை அனைவரும் மலா் வளையம் வைத்து இன்னுயிா் நீா்த்த காவலா்களுக்கு மரியாதை செலுத்தினா்.

கேரம் போட்டிகளில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனைகள்! சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

ஓடை கால்வாய் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

சென்னை ஜிஎஸ்டி ஆணையா் அலுவலகத்தில் தீ: அலுவலக கோப்புகள், கணினிகள் எரிந்து சேதம்!

கொல்கத்தா பாரதி தமிழ்ச் சங்கம் சாா்பில் பேராசிரியா் ய.மணிகண்டனுக்கு விருது!

ஏகாம்பரநாதா் கோயில் கும்பாபிஷேகம்! பக்தா்களுக்கு சந்நிதி தெரு வழியாக மட்டுமே அனுமதி!

SCROLL FOR NEXT