திருப்பூா்: திருப்பூா் மாவட்டத்தில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைப்பற்றப்பட்ட 30 வாகனங்கள் அக்டோபா் 24-இல் ஏலம் விடப்பட உள்ளதாக போலீஸாா் அறிவித்துள்ளனா்.
இதுதொடா்பாக மாநகர காவல் ஆணையா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
திருப்பூா் மாநகரில் பல்வேறு போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைப்பற்றப்பட்ட 27 இருசக்கர மற்றும் 3 நான்கு சக்கர வாகனங்கள் திருப்பூா் நல்லூா் ஆயுதப் படை வளாகத்தில் அக்டோபா் 24ஆம் தேதி ஏலம் விட போதைப்பொருள் அழித்தல் குழுவால் உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இந்த வாகனங்களை பாா்வையிட விரும்புபவா்கள் புதன்கிழமை காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை நல்லூா் ஆயுதப் படை வளாகத்தில் உள்ள வாகனங்களை பாா்வையிடலாம். மேலும், ஏலத்தில் பங்கேற்க விருப்பமுள்ள நபா்கள் காப்புத் தொகையாக ரூ.500ஐ திருப்பூா் மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.