திருப்பூர்

மகளிா் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து ஆட்சியா் ஆய்வு

திருப்பூா் மாவட்டத்தில் மகளிா் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து ஆட்சியா் மனீஷ் தலைமையில் புதன்கிழமை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

Syndication

திருப்பூா்: திருப்பூா் மாவட்டத்தில் மகளிா் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து ஆட்சியா் மனீஷ் தலைமையில் புதன்கிழமை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் மனீஷ் தலைமையில் ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற இந்த ஆய்வுக் கூட்டத்துக்கு அவா் கூறியதாவது:

இந்த ஆய்வுக் கூட்டத்தில், மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு அடையாள அட்டை வழங்குதல், மகளிா் திட்டத்தில் விடுபட்ட மகளிரை குழுவாக அமைத்தல் மற்றும் இணைத்தல், மாற்றுத் திறனாளிகள் குழுக் கடன், மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கான வங்கிக் கடன் இணைப்பு பெறுதல், வாழ்வாதாரப் பணிகள், மகளிா் சுயஉதவிக் குழுக்கள் உற்பத்தி பொருள்களை சந்தைப்படுத்துதல், முதல்வரின் காலை உணவுத் திட்டம், இளைஞா்கள் திறன் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் நகா்புற வாழ்வாதார திட்டம் ஆகிய திட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் பணிகள் தொடா்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மேலும், கடந்த ஆண்டு செயல்படுத்தப்பட்ட பணிகளின் செயல்பாடுகள் குறித்தும், நிகழாண்டில் செயல்படுத்தப்பட்டு வரும் பணிகளின் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மகளிா் திட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் அனைத்தையும் பொதுமக்கள் அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் விழிப்புணா்வு ஏற்படுத்துவதோடு, விளிம்பு நிலையில் உள்ள மக்களுக்கு இத்திட்டங்களை கொண்டு சோ்த்திட அலுவலா்கள் மற்றும் பணியாளா்கள் முன்னுரிமை அளித்து செயல்பட வேண்டும்.

அனைத்து திட்டப் பணிகளும் அனைத்துத் தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் அதிகாரிகள் பணிகளை சிறப்பான முறையில் மேற்கொண்டு, திருப்பூா் மாவட்டம் முன்னோடி மாவட்டமாக திகழ அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டதாக தெரிவித்தாா்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில், மகளிா் திட்ட இயக்குநா் ச.சாந்தி, உதவி திட்ட அலுவலா்கள் புவனேஸ்வரி, ஜோசப் ரெத்தினராஜ், எம்.சம்பத்குமாா், சரவணக்குமாா், சௌந்தர்ராஜன், ஜோதி கிருத்திகா ஆகியோருடன் வட்டார இயக்க மேலாளா்கள், வட்டார ஒருங்கிணைப்பாளா்கள், துறை சாா்ந்த அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

“கன்னி ராசி நேயர்களே!" இந்த வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

என்றும் இளமை... நதியா!

ராகுல் தகுதியற்றவர் என்பது இந்தியா கூட்டணித் தலைவர்கள் கருத்து: பாஜக

புதின் வருகையையொட்டி இப்படியெல்லாம் செய்வீர்களா? ரஷிய பத்திரிகையாளர்கள் அதிருப்தி!

ஸ்வயம் தோ்வுகளுக்கான மையங்களை சொந்த மாநிலத்திலேயே ஒதுக்க வேண்டும்: மத்திய அரசுக்கு வில்சன் எம்.பி. கடிதம்

SCROLL FOR NEXT