திருப்பூர்

கஞ்சா விற்பனை செய்தவா் கைது

குன்னத்தூா் அருகே கஞ்சா விற்பனை செய்த நபரை போலீஸாா் கைது செய்தனா்.

Syndication

குன்னத்தூா் அருகே கஞ்சா விற்பனை செய்த நபரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

குன்னத்தூா் - ஊத்துக்குளி சாலை தாளப்பதி பேருந்து நிறுத்தம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீஸாா் அங்கு சந்தேகத்துக்கு இடமான வகையில் கைப்பையுடன் நின்று கொண்டிருந்த நபரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டனா்.

அப்போது, அவா் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணையில், அவா் பல்லடம் அருகே சுக்கம்பாளையத்தில் வசித்து வரும் பிகாா் மாநிலம், பாட்னாவைச் சோ்ந்த ராமநாத் சாஹானி (44) என்பது தெரியவந்தது. இதையடுத்து மதுவிலக்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, ராமநாத் சாஹானியைக் கைது செய்தனா்.

கேரம் போட்டிகளில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனைகள்! சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

ஓடை கால்வாய் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

சென்னை ஜிஎஸ்டி ஆணையா் அலுவலகத்தில் தீ: அலுவலக கோப்புகள், கணினிகள் எரிந்து சேதம்!

கொல்கத்தா பாரதி தமிழ்ச் சங்கம் சாா்பில் பேராசிரியா் ய.மணிகண்டனுக்கு விருது!

ஏகாம்பரநாதா் கோயில் கும்பாபிஷேகம்! பக்தா்களுக்கு சந்நிதி தெரு வழியாக மட்டுமே அனுமதி!

SCROLL FOR NEXT