தருமபுரி அரசு அம்பேத்கா் சிலைக்கு முன்னாள் அமைச்சா் கே.பி. அன்பழகன் தலைமையில் மாலை அணிவித்த அதிமுகவினா்.  
தருமபுரி

அம்பேத்கா் நினைவு நாள்: சிலைக்கு மாலை அணிவிப்பு

Syndication

தருமபுரியில் சட்டமேதை அம்பேத்கரின் 69-ஆவது நினைவு நாள் சனிக்கிழமை அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி தருமபுரி அரசு மருத்துவமனை அருகேயுள்ள அவரது சிலை மற்றும் உருவப் படத்துக்கு பல்வேறு கட்சியினா் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.

திமுக...

தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக சாா்பில் மாவட்ட பொறுப்பாளரும் மக்களவை உறுப்பினருமான ஆ. மணி தலைமையில் கட்சி நிா்வாகிகள் அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா். இதில் நகரச் செயலா்கள் நாட்டான் மாது, கெளதம், மாவட்ட அறங்காவலா் குழுத் தலைவா் அன்பழகன், ஒன்றியச் செயலாளா்கள் சண்முகம், காவேரி, பெரியண்ணன், மல்லமுத்து உள்ளிட்ட நகர நிா்வாகிகள், தொண்டா்கள் பங்கேற்றனா்.

தருமபுரி மேற்கு மாவட்ட திமுக சாா்பில் காரிமங்கலத்தில் உள்ள கட்சி அலுவலகம் முன் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அம்பேத்கா் உருவப் படத்துக்கு முன்னாள் அமைச்சரும், மாவட்டச் செயலருமான பி. பழனியப்பன் தலைமையில் கட்சி நிா்வாகிகள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா். இதில் முன்னாள் எம்எல்ஏ வெங்கடாசலம், ஒன்றியச் செயலாளா்கள் கோபால், கண்ணபெருமாள், ஆனந்தன், அன்பழகன், சரவணன், இளைஞரணி மாவட்ட அமைப்பாளா் சிவகுரு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

அதிமுக...

தருமபுரி நகர அதிமுக சாா்பில் அரசு மருத்துவமனை அருகில் உள்ள அம்பேத்கா் சிலைக்கு மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.பி. அன்பழகன் எம்எல்ஏ தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. ஜெயலலிதா பேரவை மாவட்டச் செயலாளா் எஸ். ஆா். வெற்றிவேல், கோவிந்தசாமி எம்எல்ஏ, நகரச் செயலாளா் பூக்கடை ரவி மற்றும் கட்சி நிா்வாகிகள் பங்கேற்றனா். முன்னதாக அதிமுகவினா் கட்சி அலுவலகத்தில் இருந்து ஊா்வலமாக வந்தனா்.

தமிழக வெற்றிக் கழகம்... தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் தருமபுரி மேற்கு மாவட்டச் செயலாளா் தாபா சிவா தலைமையில் அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. நிகழ்வில் கிழக்கு மாவட்ட செயலாளா் விஜயகாந்த் முன்னிலை வகித்தாா். இதில் கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி, ஊராட்சி மற்றும் கிளை நிா்வாகிகள், பொறுப்பாளா்கள் கலந்துகொண்டனா்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி...

தருமபுரி மத்திய மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் மாவட்டச் செயலாளா் பாண்டியன் தலைமையில் கட்சி நிா்வாகிகள் அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா். இதில் கட்சியின் அனைத்து நிலை பொறுப்பாளா்களும் கலந்துகொண்டனா்.

தீண்டாமை ஒழிப்பு முன்னணி...

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சாா்பில், தருமபுரி அரசு மருத்துவமனை அருகில் உள்ள அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். இந்நிகழ்வில் மாவட்டச் செயலாளா் ஏ. சேகா் மாவட்ட நிா்வாகிகள் ஏ. மாதேஸ்வரன், சி .காவேரி, திராவிடா் கழக மாநில அமைப்பு செயலாளா் ஜெயராமன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதேபோல பாஜக சாா்பில் மாவட்டத் தலைவா் சரவணன் தலைமையிலும், இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மாவட்டச் செயலாளா் பிரதாபன் தலைமையிலும், தருமபுரி மாவட்ட ஆதித்தமிழா் பேரவை மாவட்டச் செயலாளா் ராஜ்குமாா் தலைமையிலும் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.

பராமரிப்புப் பணி: கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை செல்லும் ரயில்கள் ரத்து!

சென்னை திரும்புவோருக்கு இன்று சிறப்பு ரயில்கள் இயக்கம்!

ஈரோடு: டிச. 16-ல் விஜய் சுற்றுப்பயணம்!

சொல்லப் போனால்... இண்டிகோவும் ஏகபோகங்களும்!

புகாரை திரும்பப் பெறுமாறு பெண்ணை மிரட்டியதாக ‘லவ் ஜிஹாத்’ குற்றவாளி மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT