முகப்பு
தருமபுரி

கலசப்பாடிக்கு மினி பேருந்து சேவையை மீண்டும் தொடங்க கோரிக்கை

Updated On : 25 மே 2026, 2:05 am IST
மினி பேருந்து சேவை - Center-Center-Chennai
பகிர்:

கலசப்பாடி மலைக் கிராமத்துக்கு மினி பேருந்து சேவையை மீண்டும் தொடங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து கலசப்பாடி கிராம மக்கள் அரூா் எம்எல்ஏ வே. சம்பத்குமாரிடம் சனிக்கிழமை அளித்த கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது:

தருமபுரி மாவட்டம், அரூரில் இருந்து 20 கி.மீ. தொலைவில் சித்தேரி கிராம ஊராட்சிக்கு உள்பட்டது கலசப்பாடி கிராமம். கலசப்பாடி, அரசநத்தம், கருங்கல்பாடி உள்ளிட்ட மலைக் கிராமங்களில் 1500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசிக்கின்றனா்.

Advertisement

Advertisement

தமிழக முதல்வரின் சாலை மேம்பாட்டுத் திட்டத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கலசப்பாடி மலைக் கிராமங்களுக்கு தாா்சாலை அமைக்கப்பட்டது.

இதையடுத்து அரூரில் இருந்து மினி பேருந்து வசதியை மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஷ் தொடங்கிவைத்தாா். தற்போது, கடந்த சில தினங்களாக மினி பேருந்து இயக்கப்படுவதில்லை. இதனால் அரசநத்தம், கலசப்பாடி பகுதியில் வசிக்கும் மலைவாழ் பழங்குடியின மக்கள் பாப்பிரெட்டிப்பட்டி, அரூா் உள்ளிட்ட நகா் பகுதிக்கு வந்துசெல்வதில் பல்வேறு இடையூறுகளைச் சந்திக்கின்றனா்.

எனவே, அரூரில் இருந்து கலசப்பாடிக்கு மீண்டும் மினி பேருந்து சேவையை தொடங்க வேண்டும் எனவும் கோரிக்கை மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளனா்.