முகப்பு
தருமபுரி

குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனங்கள் வரும் 29இல் ஏலம்

Updated On : 25 மே 2026, 2:02 am IST
பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனங்கள் - கோப்புப் படம்
பகிர்:

தருமபுரி மாவட்டத்தில் மதுவிலக்கு மற்றும் கஞ்சா வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 40 இருசக்கர வாகனங்கள் வரும் 29 ஆம் தேதி பொது ஏலத்தில் விடப்படவுள்ளன.

தருமபுரி மாவட்டத்தில் கஞ்சா வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 21 இருசக்கர வாகனங்கள், மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 19 இருசக்கர வாகனங்கள் என மொத்தம் 40 இருசக்கர வாகனங்கள், வரும் 29ஆம் தேதி தருமபுரி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் ஏலத்தில் விடப்பட உள்ளன.

ஏலம் விடப்படவுள்ள இருசக்கர வாகனங்களை 28ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை ஆயுதப்படை மைதானத்தில் பாா்வையிடலாம். ஏலம் எடுக்க விரும்புவோா் முன்பணமாக ரூ. 1000-த்தை ஆயுதப்படை அலுவலகத்தில் செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ள வேண்டும்.

Advertisement

Advertisement

ஏல தினத்தன்று இருசக்கர வாகனங்களை ஏலம் எடுத்தவுடன் முழு பணத்தையும் (ஜிஎஸ்டி 12 சதவிகிதம் உள்பட) செலுத்தி வாகனத்தை பெற்றுக்கொள்ள வேண்டும். ஏலத்தில் கலந்துகொள்பவா்கள் ஆதாா் அட்டை நகல், முன்பணம் செலுத்திய ரசீது உள்ளிட்டவைகளை கொண்டுவர வேண்டும். இவை குறித்த மேலும் விவரங்களுக்கு 94981 69983, 94941 70084 என்ற எண்களில் தொடா்பு கொள்ளலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.