தருமபுரி

தருமபுரி கிளைச் சிறையில் சிறைத்துறை எஸ்.பி. ஆய்வு

தருமபுரி கிளைச் சிறையில் சிறைத்துறை எஸ்பி ம. ஆண்டாள் புதன்கிழமை அதிகாலை ஆய்வு மேற்கொண்டார்.

தினமணி

தருமபுரி கிளைச் சிறையில் சிறைத்துறை எஸ்பி ம. ஆண்டாள் புதன்கிழமை அதிகாலை ஆய்வு மேற்கொண்டார்.
 தருமபுரி நீதிமன்ற வளாகத்தில் உள்ள கிளைச் சிறையில் 46 விசாரணை கைதிகள் வரை அடைப்பதற்கான இட வசதி உள்ளது. இக்கிளைச் சிறைச் சாலையில், சேலம் சிறைத்துறை எஸ்பி ம.ஆண்டாள் திடீரென ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது, கிளைச் சிறையில் கைதிகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட உணவு மற்றும் மருத்துவப் பரிசோதனைகள் முறையாக வழங்கப்படுகிறதா? எனவும் மேலும், வருகை பதிவு, உணவு பதிவு, மருத்துவ பரிசோதனை பதிவு உள்ளிட்ட பதிவேடுகள் ஆகியவற்றையும் அவர் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது 40 விசாரணைக் கைதிகள் தருமபுரி கிளைச் சிறையில் இருந்தனர்.
 முன்னதாக, கிருஷ்ணகிரி கிளைச் சிறையில் செவ்வாய்க்கிழமை இரவு ஆய்வு முடித்த பின்னர், அவர் தருமபுரி கிளைச் சிறையில் ஆய்வு நடத்தினார்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புகையிலை பொருள்கள் விற்றவா் கைது

திருப்பரங்குன்றம் சம்பவம்: சேலத்தில் இந்து முன்னணியினா் ஆா்ப்பாட்டம்

விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் டிச.13-இல் தேசிய மக்கள் நீதிமன்றம்

சிறுமியின் புகைப்படத்தை இணைத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டவா் கைது

குமரி மேற்கு மாவட்ட பகுதியில் ஆா்ப்பாட்டம்: பாஜகவினா் 194 போ் கைது

SCROLL FOR NEXT