தருமபுரியில் புதன்கிழமை தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசு அலுவலர் ஒன்றிய மாவட்டத் தலைவர் என்.மணி தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் க.ஷண்முகானந்தம், முன்னாள் மாவட்டத் தலைவர் ஏ.மாணிக்கம், மாவட்டப் பொருளர் சி.சிவசண்முகவடிவேலு உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். 6-ஆவது ஊதியக்குழுவில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளை களைய வேண்டும். மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை தமிழக அரசு ஏற்று நடத்த வேண்டும். தலைமைச் செயலகம் உள்பட அனைத்துத் துறைகளில் உள்ள காலிபணியடங்களை நிரப்ப வேண்டும். தமிழக அரசு அலுவலகர்களுக்கு என தனியாக நிர்வாகத் தீர்ப்பாயம் ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
கிருஷ்ணகிரியில்... புறநகர் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாவட்டத் தலைவர் சரவணன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் கார்த்திகேயன், தமிழ்நாடு வேளாண் துறை நிர்வாக பணியாளர்கள் சங்க மாநிலத் தலைவர் கண்ணன், அரசுத் துறை ஊர்தி ஓட்டுநர் சங்க மாவட்டத் தலைவர் அன்பழகன், அலுவலக உதவியாளர் சங்க மாவட்டத் தலைவர் சையத் நசீர் அகமது உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதில், அனைத்து துறை அதிகாரிகளுக்கும் வாகனம் மற்றும் ஓட்டுநர் நியமனம் வழங்கிட வேண்டும். தொழில்வரியை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.