தருமபுரி

11 இருளருக்கு வீட்டுமனை பட்டா

தருமபுரியில் இருளர் இனத்தவர் 11 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டாக்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன

தினமணி

தருமபுரியில் இருளர் இனத்தவர் 11 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டாக்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன.
 தருமபுரி மாவட் ஆட்சியர் கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பென்னாகரம் வட்டம், கூத்தப்பாடி ஊராட்சிக்குள்பட்ட பன்னப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 11 இருளர் இனத்தவருக்கு, வருவாய்த்துறையின் மூலம் இலவச வீட்டுமனை பட்டா மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி துறையின் சார்பில், சமூக பொருளாதார மேம்பாட்டு திட்டத்தின் கீழ், தலா ரூ. 1.70 லட்சம் மதிப்பிலான மொத்தம் ரூ.18 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பில் தொகுப்பு வீடுகள் கட்டுவதற்கான ஆணைகளை மாவட்ட ஆட்சியர் கே.விவேகானந்தன் வழங்கினார்.
 மாவட்ட வருவாய் அலுவலர் அ.சங்கர், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் எம்.காளிதாசன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) செந்தில்குமார் கோட்டாட்சியர் ராமமூர்த்தி, பென்னாகரம் வட்டாட்சியர் கற்பகவடிவு ஆகியோர் உடனிருந்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

1,327 பயனாளிகளுக்கு ரூ.22.86 கோடி நலத்திட்ட உதவிகள்: அமைச்சா் காந்தி வழங்கினாா்

விடுதிகளில் எண்ம முறையில் ஆதாா் அடையாளம் சரிபாா்ப்பு: புதிய விதி விரைவில் அமல்!

பெங்களூரு சின்னசாமி திடலில் ஐபிஎல் போட்டிகள்: கா்நாடக துணை முதல்வர் சிவக்குமார்!

திருமணியில் அதிமுகவினா் திண்ணை பிரசாரம்

தில்லி - சென்னை விமானக் கட்டணம் ரூ.35,000! இண்டிகோ குளறுபடியால் தொடர்ந்த அவதி!!

SCROLL FOR NEXT