தருமபுரி

சாலை விபத்து: விவசாயி சாவு

கடத்தூர் அருகே மினி சரக்கு வாகனம் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற விவசாயி உயிரிழந்தார்.

தினமணி

கடத்தூர் அருகே மினி சரக்கு வாகனம் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற விவசாயி உயிரிழந்தார்.
 நத்தமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் கண்ணையன் (45). இவர், இருசக்கர வாகனத்தில் கடத்தூர்-பொம்மிடி சாலையில் செவ்வாய்க்கிழமை சென்று கொண்டிருந்தபோது தேக்கல்நாய்க்கன்பட்டி எனுமிடத்தில் எதிரே வந்த மினி சரக்கு வாகனம் அவர் மீது மோதியது. இதில், கண்ணையன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். கடத்தூர் போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.
 கண்ணாடி உடைப்பு: புட்டிரெப்பட்டி வழியாக தருமபுரி-அரூர் வழித்தடத்தில் இயக்கப்படும் தனியார் பேருந்து கர்நாடக மாநில அதிமுக பொருளாளர் ராஜேந்திரனுக்குச் சொந்தமானது என்று கூறப்படுகிறது.
 புட்டிரெட்டிப்பட்டியில் சாலையோரம் பேருந்தை நிறுத்திவிட்டு அதன் ஓட்டுநர், நடத்துநர் தூங்கியுள்ளனர். இரவு நேரத்தில் பேருந்தின் முன்பக்கம், பின்பக்க கண்ணாடிகளை மர்ம நபர்கள் உடைத்துள்ளனர். கடத்தூர் போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

என்றும் இளமை... நதியா!

ராகுல் தகுதியற்றவர் என்பது இந்தியா கூட்டணித் தலைவர்கள் கருத்து: பாஜக

புதின் வருகையையொட்டி இப்படியெல்லாம் செய்வீர்களா? ரஷிய பத்திரிகையாளர்கள் அதிருப்தி!

ஸ்வயம் தோ்வுகளுக்கான மையங்களை சொந்த மாநிலத்திலேயே ஒதுக்க வேண்டும்: மத்திய அரசுக்கு வில்சன் எம்.பி. கடிதம்

சர்வதேச கிரிக்கெட்டில் 20000 ரன்களைக் கடந்த ரோஹித் சர்மா!

SCROLL FOR NEXT