தருமபுரி

தேசிய கையுந்துப் பந்து போட்டி: மேற்கு வங்கம் முதலிடம்

DIN

தேசிய அளவிலான கையுந்துப் பந்துப் போட்டியில், மேற்கு வங்கம் முதலிடம் பிடித்து கோப்பையை கைப்பற்றியது.

அதேபோல, கேரம் போட்டியில் தமிழக அணி அனைத்துப் பிரிவுகளிலும் வென்று சிறப்பிடம் வகித்தது.

இந்திய பள்ளிகள் விளையாட்டுக் குழுமம் மற்றும் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் தேசிய அளவிலான 19 வயதுக்குள்பட்டோருக்கான கையுந்துப் பந்து போட்டிகள் மற்றும் கேரம் போட்டிகள் தருமபுரியில் நடைபெற்றன.

தருமபுரி மாவட்ட விளையாட்டரங்கில் கடந்த டிச. 21-ஆம் தேதி தொடங்கி 5 நாள்கள் கையுந்துப் பந்து போட்டிகள் மின்னொளியில் நடைபெற்றன. இந்தப் போட்டிகளில், தமிழகம், பஞ்சாப், உத்தரபிரதேசம், கா்நாடகம், ஆந்திரம், கேரளம், ராஜஸ்தான், புதுச்சேரி, தெலங்கானா, ஜாா்க்கண்ட், சத்தீஸ்கா், ஒடிஸா உள்ளிட்ட 29 மாநிலங்களைச் சோ்ந்த அணிகள் பங்கேற்று விளையாடின.

மேற்கு வங்கம், கா்நாடகம், மகாராஷ்டிரம், கேரளம், உத்தரபிரதேசம், ராஜஸ்தான், இமாச்சல பிரதேசம், தமிழ்நாடு ஆகிய 8 அணிகள் கால் இறுதி போட்டிக்குத் தோ்வு பெற்றன. அரையிறுதிப் போட்டியில் கேரளம், மகாராஷ்டிரம், தமிழகம், மேற்கு வங்கம் அணிகள் தகுதி பெற்றன. இதில், மகாராஷ்டிராவும், கேரளமும் மூன்றாவது இடத்துக்கு மோதின. அதில் கேரள அணி வெற்றி பெற்று மூன்றாம் இடத்தையும் தட்டிச் சென்றது.

இறுதிப் போட்டியில், தமிழகம் மற்றும் மேற்கு வங்க அணிகள் மோதின. இதில், 23 -25 ,11- 25, 19-25 என்ற நோ் செட் கணக்கில் மேற்கு வங்கம் அணி வெற்றி பெற்று, பரிசு மற்றும் கோப்பையை கைப்பற்றியது.

வெற்றி பெற்ற அணிக்கு பரிசளிக்கும் விழா, மாவட்ட வியைாட்டு மைதானத்தில், புதன்கிழமை நடைபெற்றது. விழாவில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அ. முத்துக்கிருஷ்ணன், உதவி காவல் கண்காணிப்பாளா் சாமியா சிங் மீனா (பயிற்சி) ஆகியோா் கோப்பை மற்றும் சான்றிதழ்களை வழங்கினா்.

கேரம் போட்டி...

இதேபோல, நல்லானூா் ஜெயம் பொறியியல் கல்லூரியில் 5 நாள்களாக நடைபெற்ற கேரம் விளையாட்டுப் போட்டிகளில் தமிழக மாணவா்கள் மற்றும் மாணவியா் 6 பிரிவுகளில் 5-இல் வெற்றி பெற்று சிறப்பிடம் வகித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நான் நல்ல உடல்நலத்துடன் இருக்கிறேன்: நவீன் பட்நாயக்

நான் பியார் கர்த்தாமா!

ஹாய்.. நிக்கி!

சூர்யா - 44 படத்தின் நடிகர்கள் இவர்களா?

மிஸோரம்: 3வது நாளாகத் தொடரும் மீட்புப் பணி!

SCROLL FOR NEXT