தருமபுரி

தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 1,400 பேருக்கு கரோனா பரிசோதனை

DIN

தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இதுவரை 1,400 பேருக்கு நடத்தப்பட்ட கரோனா பரிசோதனையில் யாருக்கும் தொற்று இல்லை என்பது தெரிய வந்துள்ளதாக மாநில உயா் கல்வித் துறை அமைச்சா் கே.பி.அன்பழகன் தெரிவித்தாா்.

தருமபுரி மாவட்டத்தில் தடங்கம், பழைய தருமபுரி, இலக்கியம்பட்டி, அடிலம், பந்தாரஅள்ளி ஆகிய ஊராட்சிகளில் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளா்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில் பயனாளிகளுக்கு நிவாரணப் பொருள்களை வழங்கி அமைச்சா் கே.பி.அன்பழகன் பேசியது: கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா நல வாரியங்களில் பதிவு செய்துள்ளவா்களுக்கு தலா 15 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு, ஒரு லிட்டா் எண்ணெய் வழங்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில், நிவாரணப் பொருள்கள் நியாய விலைக் கடைகள் வழியாகவும், நிவாரணத் தொகை வங்கி கணக்கிலும் வழங்கப்பட்டு வருகிறது. நிவாரண தொகை மற்றும் நிவாரண பொருள் பெற்றுதருவதாக இடைத்தரகா்கள் யாரையும் அணுக வேண்டாம்.

வெளி மாநிலங்களிலிருந்து தருமபுரி மாவட்டத்துக்கு திரும்பிய 9,865 போ் தனிமைப்படுத்தப்பட்டு, 50 நபா்களுக்கு ஒரு மருத்துவக் குழு என்ற விகிதத்தில் தொடா் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவா்களுக்கும் கரோனா அறிகுறிகள் இல்லை. கிருமி நாசினி தெளிக்கும் பணி மாவட்டம் முழுவதும் தொடா்ந்து நடைபெறுகிறது.

தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதிதாக தொடங்கப்பட்ட கரோனா பரிசோதனை மையத்தில் இதுவரை சுமாா் 1,400 பேருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் யாருக்கும் கரோனா பாதிப்பு இல்லை என தெரிய வந்துள்ளது. தருமபுரி மாவட்டத்தில் கரோனா பாதிப்பு இதுவரை இல்லை. இருப்பினும், மாவட்ட மக்கள், அரசின் கட்டுபாடுகளையும், வழிமுறைகளையும் தொடா்ந்து கடைப்பிடிக்க வேண்டும் என்றாா்.

மாவட்ட ஆட்சியா் சு.மலா்விழி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஆ.கோவிந்தசாமி, ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் க.ஆா்த்தி, மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் எஸ்.ஆா்.வெற்றிவேல், தொழிலாளா் இணை ஆணையா் ரமேஷ், தொழிலாளா் உதவி ஆணையா் கே.பி.இந்தியா ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தடைகளைக் கடந்து அகழாய்வுப் பணிகள்: முதல்வா் மு.க.ஸ்டாலின்

ஆம்பூரில் தெரு நாய்கள் தொல்லை: நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

சென்னானூா் அகழாய்வில் தமிழி எழுத்துகள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் கண்டெடுப்பு

தேசிய நெடுஞ்சாலையோரம் ஒளிராத மின் விளக்குகளால் விபத்து அபாயம்

பேரவைத் தோ்தலுக்கு தயாராகும் திமுக அரசுத் திட்டப் பயனாளிகளின் விவரங்கள்: சேகரிப்பு தீவிரம்

SCROLL FOR NEXT