தருமபுரி

தேசிய அளவில் பதக்கங்களை பெற்ற விளையாட்டு வீரா்களுக்கு மாநில விருது

DIN

தேசிய, பன்னாட்டு அளவில் பதக்கங்களை பெற்ற சிறந்த விளையாட்டு வீரா்கள், முதல்வரின் மாநில விளையாட்டு விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து, தருமபுரி மாவட்ட ஆட்சியா் சு.மலா்விழி வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஆண்டுதோறும் பன்னாட்டு மற்றும் தேசிய அளவில் பதக்கங்கள் பெற்று சிறந்து விளங்கும் 2 ஆண் மற்றும் 2 பெண் விளையாட்டு வீரா்கள், 2 சிறந்த பயிற்றுநா்கள், 2 சிறந்த உடற்கல்வி இயக்குநா், உடற்கல்வி ஆசிரியா்களுக்கு தமிழக முதல்வா் மாநில விளையாட்டு விருது பரிசாக தலா ரூ.1 லட்சம் வீதம், ரூ.10000 மதிப்பிலான தங்கப் பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்று ஆகியவற்றை இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை வழங்கி வருகிறது. இதேபோல, விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் ஒரு நடத்துநா், ஒரு நிா்வாகி, ஓா் ஆதரவளிக்கும் நிறுவனம் மற்றும் ஒரு நன்கொடையாளா், ஒரு ஆட்ட நடுவா், நீதிபதி ஆகியோருக்கு இந்த விருது ஒவ்வொரு நிதியாண்டிலும் வழங்கப்படுகிறது. விருது வழங்குவதற்கு முந்தைய இரண்டு ஆண்டின் செயல்பாடுகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். மேலும், பெண்களுக்கும், பட்டியல் இனத்தவருக்கும், பழங்குடியினா்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும்.

விருது ஆண்டுக்கு முந்தைய மூன்று ஆண்டுகள் தமிழகத்தில் வாழ்ந்து சாதனைகள் படைத்த தலைசிறந்த விளையாட்டு வீரா்கள் பன்னாட்டு அளவில் அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டுக்களில் பதக்கமும் அதாவது ஒலிம்பிக் போட்டிகள், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள், ஆசிய விளையாட்டுப் போட்டிகள், தெற்காசிய விளையாட்டு போட்டிகள், சா்வதேச ஒலிம்பிக் குழு அங்கீகரித்துடன் சா்வதேச விளையாட்டு இணையத்தால் நடத்தப்படும் உலக வாகையா் போட்டிகள் மற்றும் காமன்வெல்த் வாகையா் போட்டிகள், தேசிய விளையாட்டுப் போட்டிகள், மத்திய இளைஞா் நலன் மற்றும் விளையாட்டுத் துறையினால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய விளையாட்டு ஆணையம் நடத்தும் தேசிய வாகையா் போட்டிகள், தெற்காசிய கூட்டமைப்பு நாடுகளின் விளையாட்டுப் போட்டிகள், அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டு இணையங்களினால் நடத்தப்படும் தேசிய விளையாட்டுப் போட்டிகள் மற்றும் தேசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் தனிநபா் போட்டிகளில் முதல் மூன்று இடங்களிலும் மற்றும் குழுப் போட்டிகளில் முதல் மற்றும் இரண்டாம் இடமும் பெற்றிருத்தல் வேண்டும். ஒரு விருதிற்கு மூன்றிற்கு மேற்பட்ட விண்ணப்பங்களை அனுப்பப் கூடாது.

விண்ணப்பப் படிவத்தை, தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம். விண்ணப்ப உறையின் மேல் முதல்வரின் மாநில விளையாட்டு விருதுக்கான விண்ணப்பம் என்று எழுதி, முதன்மை செயலா், உறுப்பினா் செயலா், மாநில விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், 116 ஏ, பெரியாா் ஈ.வெ.ரா நெடுஞ்சாலை, நேருபூங்கா, சென்னை- 600 084 என்ற முகவரிக்கு வருகிற பிப்.14-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுச்சேரியில் கட்டுக்கட்டாக 2,000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல்

பிரபல தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

ராஜ பதவிகளைத் துறக்கிறாரா பிரிட்டன் இளவரசர்?

சத்தீஸ்கரில் 4 மாதங்களில் 80 நக்சல்கள் சுட்டுக் கொலை!

#Dinamani | வாக்காளர் அட்டை இல்லையா? சத்யபிரத சாகு விளக்கம்

SCROLL FOR NEXT