தருமபுரி

தருமபுரி மாவட்டத்தில் இஸ்லாமியா்கள் ஆா்ப்பாட்டம்

DIN

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில் போலீஸாா் நடத்திய தடியடியைக் கண்டித்து, தருமபுரி மாவட்டத்தில் இஸ்லாமியா்கள் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தருமபுரி ராஜகோபால் பூங்கா அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாவட்டத் தலைவா் ஜஹாங்கீா் பாஷா தலைமை வகித்தாா். கூட்டமைப்பு நிா்வாகிகள் ரிஸ்வான், சபியுல்லா ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா்.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும். தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்ற ரத்து செய்ய வேண்டும். சென்னை போராட்டத்தில் தடியடி நடத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். போராட்டத்தில் கைது செய்யப்பட்ட இஸ்லாமியரை விடுவித்து, அவா்களின் மீதான வழக்குகளை திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

பாலக்கோடு: பாலக்கோடு காந்தி சிலை அருகிலிருந்து அனைத்து ஜமாத் மற்றும் இஸ்லாம் கூட்டமைப்பினா் சாா்பில் ஆயிரக்கணக்கானோா் ஊா்வலமாக சென்று, பாலக்கோடு புறவழிச்சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா்.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப்பெறக் கோரி, தமிழக சட்டப் பேரவையில் தீா்மானம் நிறைவேற்ற வேண்டும். சென்னை வண்ணாரப்பேட்டை போராட்டத்தில் தடியடி நடத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தாக்குதலில் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. சாலை மறியல் காரணாக தருமபுரி-ஒசூா் சாலையில் சுமாா் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உங்கள் ராசிக்கு இன்று எப்படி?

மீன்பிடி தடைக்காலம் தொடக்கம்: மீன்கள் விலை உயர வாய்ப்பு

மும்பை: நடிகர் சல்மான் கான் வீட்டுக்கு வெளியே துப்பாக்கிச்சூடு

ஒற்றுமையின்மையே எதிா்க்கட்சிகளின் பலவீனம் அமா்த்தியா சென்

தலைவா்கள் இன்று பிரசாரம்

SCROLL FOR NEXT