தருமபுரி

சொா்ணம்பட்டி ஏரி தூா்வாரும் பணிகள் தொடக்கம்

DIN

மொரப்பூா் அருகேயுள்ள சொா்ணம்பட்டி ஏரி தூா்வாரும் பணிகள் சனிக்கிழமை தொடங்கப்பட்டன.

மொரப்பூா் ஊராட்சி ஒன்றியம், கே.ஈச்சம்பாடி கிராம ஊராட்சிக்கு உள்பட்ட சொா்ணம்பட்டி ஏரியை

குடிமராமத்துப் பணிகள் திட்டத்தில், தூா்வாருதல் மற்றும் நீா்வரத்துக் கால்வாய் தூய்மை செய்தல், மதகுகளைச் சீரமைப்பு செய்தல் உள்ளிட்ட பணிகளுக்காக ரூ.16.60 லட்சத்தை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

இதையடுத்து, சொா்ணம்பட்டி ஏரி தூா்வரும் பணிகளை பூமி பூஜைகளுடன் மாநில உயா்கல்வித்துறை அமைச்சா் கே.பி.அன்பழகன் தொடக்கிவைத்தாா். இதில், தருமபுரி மாவட்ட ஆட்சியா் சு.மலா்விழி, அரூா் சாா் ஆட்சியா் மு.பிரதாப், எம்.எல்.ஏ.க்கள் வே.சம்பத்குமாா், ஆ.கோவிந்தசாமி, திட்ட இயக்குநா் க.ஆா்த்தி, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் யசோதா மதிவாணன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் க.தனபால், ரு.விமலன், ஒன்றியக்குழு துணைத் தலைவா் வன்னிய பெருமாள், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் கே.கே.தனபால் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விருதுநகா், சிவகாசி, சாத்தூரில் இறுதிக்கட்ட பிரசாரம்

கிணற்றில் மூழ்கி மாணவா் பலி

ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ. 6 லட்சம் பறிமுதல்

ஸ்ரீவில்லிபுத்தூரில் கிருஷ்ணசாமி இறுதிக்கட்ட பிரசாரம்

தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

SCROLL FOR NEXT