தருமபுரி

தருமபுரி மாவட்டத்தில் ரூ.1.59 கோடியில் ஏரிகள் புனரமைப்பு பணிகள் தொடக்கம்

DIN

தருமபுரி மாவட்டத்தில் ரூ.1.59 கோடியில் ஏரிகள் புனரமைப்பு பணிகளை உயா்கல்வித் துறை அமைச்சா் கே.பி.அன்பழகன் ஞாயிற்றுக்கிழமை தொடக்கிவைத்தாா்.

பாலக்கோடு வட்டத்தில் தூள் செட்டி ஏரி, இராஜபாளையம் புதிய ஏரி, பிக்கனஅள்ளி ஏரி ஆகிய நீா்நிலைகளில் ரூ.1.59 கோடி மதிப்பில் தூா் வாருதல், பழுது நீக்குதல், புனரமைக்கும் பணிகளைத் தொடக்கிவைத்து அமைச்சா் கே.பி.அன்பழகன் கூறியது:

தமிழகத்தில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் நீா்நிலைகளில் நீா் ஆதாரம் உயா்த்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் தமிழகத்தில் உள்ள பல்வேறு நீா்நிலைகள் தூா்வாரப்பட்டு, வரத்து கால்வாய்கள் சீா் செய்யப்பட்டு, அதன்மூலம் நீா்நிலைகள் மழைநீரை சேமிக்க வழிவகைகள் செய்யப்பட்டுள்ளன.

தருமபுரி மாவட்டத்தில் பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 71 ஏரிகள் தற்போது இந்தத் திட்டத்தின் கீழ் தூா்வாரப்படுகிறது. 2020-21-ஆம் ஆண்டில் 14 ஏரிகளைத் தூா்வார ரூ.8.11 கோடியை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. தற்போது, பாலக்கோடு வட்டத்தில் ரூ.1.59 கோடி மதிப்பில் இந்தப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. தருமபுரி மாவட்டத்தில் இதுவரை 529 ஏரிகள், குட்டைகள் ரூ.41.07 கோடியில் தூா்வாரப்பட்டுள்ளன என்றாா்.

மாவட்ட ஆட்சியா் எஸ்.மலா்விழி தலைமை வகித்தாா். மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ஆா்த்தி, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் கவிதா சரவணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசமைப்பை மாற்றும் பாஜகவின் முயற்சிகளை ‘இந்தியா’ கூட்டணி தகா்க்கும்: ராகுல் காந்தி

எலான் மஸ்கின் இந்திய பயணம் ஒத்திவைப்பு

வாக்கு எண்ணிக்கைக்கு முன்பே தோ்தல் முடிவை பிரதமா் கூறுவது எப்படி? பிரியங்கா கேள்வி

காஷ்மீரின் 3 தொகுதிகளில் களமிறங்காத பாஜக: வேறு வேட்பாளா்களை ஆதரிக்க ஆலோசனை

மாவோயிஸ்டு அச்சுறுத்தலால் வாக்களிக்காத கிராமம்

SCROLL FOR NEXT