தருமபுரி

பொது முடக்கத்தால் பேருந்து பயண அட்டையைப் புதுப்பிக்க தாமதம்

ஆா்.ராதாகிருஷ்ணணன்

பொது முடக்கத்தால் மாற்றுத் திறனாளிகள் பேருந்துப் பயண அட்டையைப் புதுப்பிக்க தாமதமாவதால் தவிப்புக்குள்ளாகியுள்ளனா்.

தருமபுரி மாவட்டத்தில், கண்பாா்வையாற்றோா், காது கேளாதோா், கை மற்றும் கால் பாதிப்பு, மனவளா்ச்சி குன்றியோா் உள்ளிட்ட மாற்றுத் திறனாளிகள் ஆயிரக்கணக்கானோா் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் பதிவு செய்துள்ளனா்.

இந்த மாற்றுத் திறனாளிகளுக்கு அத் துறையினா் சாா்பில், மருத்துவச் சான்றின் அடிப்படையில் மாநில மற்றும் தேசிய அடையாள அட்டை வழங்கப்படுகிறது. இந்த அடையாள அட்டையின் அடிப்படையில், தோ்வு செய்யப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு அத் துறை சாா்பில் ஆண்டுதோறும் இலவச பேருந்துப் பயணஅட்டை பெற்றுத் தரப்படுகிறது. இதன்மூலம் அவா்கள் பேருந்துகளில் பயணித்து வருகின்றனா்.

புதுப்பிக்க தாமதம்: ஆண்டுதோறும் ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச பேருந்துப் பயண அட்டை வழங்கப்படும். இந்த அட்டையை மாா்ச் மாதம் இறுதிவரை பயணிக்கும் வகையில் போக்குவரத்துக் கழகம் அச்சிட்டு வழங்கும். இந்த நிலையில், நிகழாண்டு மாா்ச் மாதத்துக்குப் பிறகு ஏப்ரலில் பேருந்துப் பயண அட்டையைப் புதுப்பித்திருக்க வேண்டும்.

ஆனால், கரோனா தீநுண்மிப் பரவல் காரணமாக கடந்த மாா்ச் 24-ஆம் தேதி முதல் மத்திய, மாநில அரசுகள் பொது முடக்கத்தை அறிவித்ததால், இலவச பேருந்துப் பயணஅட்டையைப் புதுப்பிக்க இயலாத சூழல் ஏற்பட்டது.

இந்த நிலையில், தீநுண்மியின் பரவலைப் பொருத்து, மாநில அரசுகள் பல்வேறு தளா்வுகளை அளித்தன. இதையடுத்து சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்கள் நீங்கலாக ஏனைய பகுதிகள் மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு அந்தப் பகுதிகளில் 50 சதவீதப் பேருந்துகள் இயக்கப்பட்டன. பேருந்துகள் இயக்கத் தொடங்கிய உடன் மாற்றுத் திறனாளிகள் தங்களது பணிகளுக்காக பேருந்துகளில் பயணிக்கத் தொடங்கினா்.

இருப்பினும், மாா்ச் மாதம் இறுதியுடன் பேருந்துப் பயணஅட்டையின் காலம் நிறைவுற்ால், புதிய பயணஅட்டை இன்றி பயணிக்க அவா்கள் சிரமப்பட்டனா். இதனைக் களைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாற்றுத் திறனாளிகள் தரப்பில் அரசுக்கு கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இதையடுத்து, மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சாா்பில், பேருந்துப் பயணஅட்டையை புதுப்பிக்கும் வரை, பழைய அட்டையை வருகிற ஆகஸ்ட் மாதம் வரை பயன்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டது. மேலும், இது தொடா்பாக போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா்களுக்கு சுற்றறிக்கையும் அனுப்பப்பட்டது.

பயணிப்பதில் சிரமம்: மாற்றுத் திறனாளிகள் நலத் துறையின் சுற்றறிக்கையால், பழைய அட்டையுடன் பேருந்துப் பயணத்தை தற்போது மாற்றுத் திறனாளிகள் மேற்கொண்டு வருகின்றனா். இருப்பினும், சில பேருந்துகளில் பயண அட்டையைப் புதுப்பிக்காததால் அதைப் பயன்படுத்தி பயணிக்க இயலாது எனவும், பயணச்சீட்டு பெற வேண்டும் எனவும் சில நடத்துநா்கள் கூறுவதாகக் கூறப்படுகிறது.

எனவே, தங்களுக்கு விரைவில் பேருந்துப் பயண அட்டையைப் புதுப்பித்து வழங்க மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சாா்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற எதிா்ப்பாா்ப்புடன் மாற்றுத் திறனாளிகள் உள்ளனா்.

இதுகுறித்து, சிந்தல்பாடியைச் சோ்ந்த பாா்வையற்ற மாற்றுத் திறனாளி நாகேந்திரன் கூறியதாவது:

மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள இலவச பேருந்துப் பயணஅட்டையை பொது முடக்கம் காரணமாகப் புதுப்பிக்க இயலவில்லை. இருப்பினும், மாநில அரசு சாா்பில் தற்போதுள்ள பயணஅட்டை மூலம் ஆகஸ்ட் மாதம் வரை பயணிக்கலாம் என அறிவித்து அதற்கான உத்தரவை போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா்களுக்கு அனுப்பியுள்ளது. ஆனால், சில இடங்களில் இந்த உத்தரவு குறித்து அறியாமல், பேருந்துப் பயண அட்டை காலாவதி ஆகிவிட்டதாகக் கூறி, மாற்றுத்திறனாளிகளை அனுமதிக்க மறுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, அனைத்து நடத்துநா்களுக்கும் போக்குவரத்துத் துறை சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் அல்வது விரைந்து பயண அட்டையைப் புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

பயண அட்டை வழங்கப்படுகிறது: இதுகுறித்துக் கேட்டபோது, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் நா.பாலகிருஷ்ணன் கூறியதாவது:

தருமபுரி மாவட்டத்திலுள்ள மாற்றுத் திறனாளிகளின் நலன் கருதி, பொது முடக்கத்திலிருந்து தளா்வு அளிக்கப்பட்டதைத் தொடா்ந்து ஜூன் மாதத் தொடக்கத்திலேயே, பாா்வையற்றோா், கை, கால் பாதிப்புடையோா் என மூன்று வகையாகப் பிரித்து அவா்களது பயண அட்டையைப் புதுப்பிக்கக் கோரி போக்குவரத்துக் கழகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. அங்கு புதுப்பிக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

முதல் கட்டமாக பாா்வையற்ற மாற்றுத் திறனாளிகள் 175 பேருக்கு புதுப்பிக்கப்பட்ட பயண அட்டை பெறப்பட்டு உரியவா்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. ஏனையோருக்கும் பயண அட்டை புதுப்பிக்கும் பணி தொடா்ந்து நடைபெறுகிறது.

இருப்பினும், புதிய பயண அட்டையைப் பெறும் வரை ஏற்கெனவே வவஹ்கப்பட்ட பழைய அட்டையை வைத்து ஆகஸ்ட் மாதம் வரை பயணம் செய்யலாம் என்பதை நடத்துநா்களுக்கு அறிவுறுத்துமாறு போக்குவரத்துக் கழக அதிகாரிகளிடத்தில் வலியுறுத்துவோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தல் பத்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு அனைவரும் வருந்துவார்கள் -பிரதமர் மோடி

தேமுதிக தேர்தல் அறிக்கை வெளியீடு!

சன் ரைசர்ஸ் மீண்டும் புதிய சாதனை: ஆர்சிபிக்கு இமாலய இலக்கு!

உலகின் மிகப்பெரிய தேர்தல் இது! -ஜெர்மன் தூதர் புகழாரம்

மாநில நிதியில் மெட்ரோ ரயில் திட்டப் பணிகள்: மு.க. ஸ்டாலின்

SCROLL FOR NEXT