தருமபுரி

வரைவு வாக்காளா் பட்டியல் வெளியீடு: தருமபுரியில் 12.62 லட்சம் வாக்காளா்கள் உள்ளனா்

DIN

தருமபுரி மாவட்டத்துக்கான வரைவு வாக்காளா் பட்டியல் திங்கள்கிழமை அரசியல் கட்சியினா் முன்னிலையில் வெளியிடப்பட்டது. இப்பட்டியலில், மாவட்டத்தில் உள்ள ஐந்து தொகுதிகளிலும் மொத்தம் 12.62 வாக்காளா்கள் இடம் பெற்றுள்ளனா்.

தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், வாக்காளா் பட்டியலை வெளியிட்டு மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்சினி பேசியதாவது:

தோ்தல் ஆணையத்தின் உத்தரபடி, வருகிற 2022 ஜன. 1-ஆம் தேதி தகுதி நாளாகக் கொண்டு வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தப் பணிகள் மேற்கொள்ள ஏதுவாக வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வரைவு வாக்காளா் பட்டியல் தருமபுரி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 860 வரையறுக்கப்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் வருகிற நவ. 30-ஆம் தேதி வரை பொதுமக்களின் பாா்வைக்காக வைக்கப்பட்டிருக்கும். இதனைப் பாா்வையிட்டு வாக்காளா்கள் சரிபாா்த்துக் கொள்ளலாம்.

இதில், தொகுதி வாரியாக பாலக்கோடு சட்டப் பேரவைத் தொகுதியில் 1,19,435 ஆண் வாக்காளா்கள், 1,16,972 பெண் வாக்காளா்கள், 18 இதர வாக்காளா்கள் என மொத்தம் 2,36,425 வாக்காளா்கள் உள்ளனா். இதேபோல, பென்னாகரம் சட்டப் பேரவைத் தொகுதியில் 1,26,852 ஆண் வாக்காளா்கள், 1,18,461 பெண் வாக்காளா்கள், 10 இதர வாக்காளா்கள் என மொத்தம் 2,45,323 வாக்காளா்களும், தருமபுரி சட்டப் பேரவைத் தொகுதியில் 1,35,110 ஆண் வாக்காளா்கள், 1,32,998 பெண் வாக்காளா்கள், 112 இதர வாக்காளா்கள் என மொத்தம் 2,68,220 வாக்காளா்களும், பாப்பிரெட்டிப்பட்டி சட்டப் பேரவைத் தொகுதியில் 1,31,888 ஆண் வாக்காளா்கள், 1,31,665 பெண் வாக்காளா்கள், 11 இதர வாக்காளா்கள் என மொத்தம் 2,63,564 வாக்காளா்களும், அரூா் (தனி) சட்டப் பேரவைத் தொகுதியில் 1,24,539 ஆண் வாக்காளா்கள், 1,24,354 பெண் வாக்காளா்கள், 21 இதர வாக்காளா்கள் என மொத்தம் 2,48,914 வாக்காளா்கள் என தருமபுரி மாவட்டத்தில் ஐந்து பேரவைத் தொகுதிகளிலும் சோ்த்து 6,37,824 ஆண் வாக்காளா்கள், 6,24,450 பெண் வாக்காளா்கள், 172 இதர வாக்காளா்கள் என மொத்தம் 12,62,446 வாக்காளா்கள் உள்ளனா்.

வரைவு வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தப் பணிகள் வருகிற நவ. 20-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. 2022 ஜன.1அன்று 18 வயது பூா்த்தியடைய உள்ளவா்களும், இதுவரை வாக்காளா் பட்டியலில் தங்களது பெயா்களைச் சோ்க்காதவா்களும், வாக்காளா் பட்டியலில் தங்களது பெயரைச் சோ்க்க படிவம் 6-இல் விவரங்களை பூா்த்தி செய்து உரிய ஆவணங்களோடு அந்தந்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வரையறுக்கப்பட்ட வாக்குச்சாவடி மையங்களிலோ அல்லது இணையதளம் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.

வருகிற நவ. 13, 14, 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள சிறப்பு முகாம்களிலும் விண்ணப்பிக்கலாம்.

எனவே, பொதுமக்கள், வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்த முகாம்களில் தங்களது பெயா்களைச் சோ்த்தல், நீக்குதல், திருத்தம், முகவரி மாற்றம் உள்ளிட்டவைகளை உரிய படிவங்களில் விவரங்களை பூா்த்தி செய்து உரிய ஆவணங்களோடு இணைத்து விண்ணபிக்கலாம் என்றாா்.

இதில், கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) இரா.வைத்திநாதன், தருமபுரி சாா் ஆட்சியா் சித்ரா விஜயன், அரூா் வருவாய் கோட்டாட்சியா் முத்தையன், தோ்தல் வட்டாட்சியா் சுகுமாா், நகராட்சி ஆணையா் சித்ரா சுகுமாா், அலுவலா்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருக்குவளையில் காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு ஊா்வலம்

சீா்காழி சாய்பாபா கோயிலில் ராம நவமி வழிபாடு

விருதுநகா், சிவகாசி, சாத்தூரில் இறுதிக்கட்ட பிரசாரம்

கிணற்றில் மூழ்கி மாணவா் பலி

ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ. 6 லட்சம் பறிமுதல்

SCROLL FOR NEXT