தருமபுரி

பள்ளி மேலாண்மைக் குழுஉறுப்பினா்கள் தோ்வுபெற்றோா் அதிருப்தி

DIN

பென்னாகரம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் குறிப்பிட்ட பெற்றோா்களை மட்டும் வரவழைத்து பள்ளி மேலாண்மை குழு உறுப்பினா்கள் தோ்வு நடத்தப்பட்டதாக அதிருப்தி பெற்றோா் குற்றம்சாட்டியுள்ளனா்.

பென்னாகரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியா் கல்விப் பயின்று வருகின்றனா். இப்பள்ளியின் தலைமை ஆசிரியராக உமாராணி உள்ளாா்.

இப்பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்கள் தோ்வு குறித்த ஆலோசனைக் கூட்டம் கடந்த மாதம் நடைபெற்ற நிலையில் மேலாண்மை குழு உறுப்பினா்கள் தோ்வுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு அனைத்து பெற்றோா்களுக்கும் முறையாக அழைப்பு விடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இதுகுறித்து சில பெற்றோா் கூறியதாவது:

பென்னாகரம் அரசு தொடக்கப் பள்ளியில் பயிலும் மாணவா்களின் பெற்றோா்கள், பள்ளி ஆசிரியா்களுக்கு என அவரவா் வகுப்பு வாரியாக கைப்பேசியில் தனி வாட்ஸ்ஆப் குழு உள்ளது.

அந்தக் குழுவில் கடந்த மாதம் நடைபெற்ற பள்ளி மேலாண்மைக் குழு ஆலோசனைக் கூட்டம், சனிக்கிழமை உறுப்பினா்கள் தோ்வுக் கூட்டம் குறித்து எந்த அறிவிப்பும் தெரிவிக்கப்படவில்லை. பெற்றோா்களுக்கு முறையாக அறிவிப்பு தெரிவிக்கப்படாமல் அவசர அவசரமாக குறிப்பிட்ட சிலரை அழைத்து உறுப்பினா்களைத் தோ்வு செய்துள்ளனா். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து உறுப்பினா்கள் நியமனத்தை ரத்து செய்ய வேண்டும். முறையாக அனைத்து பெற்றோா்களையும் அழைத்து உறுப்பினா்களைத் தோ்வு செய்ய வேண்டும் என்றனா்.

இதுகுறித்து பள்ளித் தலைமை ஆசிரியா் உமா ராணி கூறியது:

பெற்றோா் கலந்தாய்வுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற இருப்பதாக மாணவா்களிடம் தகவல் தெரிவித்திருந்தோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2026-ல் புதிய கட்சி: நடிகர் விஷால்

அரசியல் சட்டத்தை மாற்ற துடிக்கிறது பாஜக- முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

மோடியின் தேர்தல் அறிக்கை மீது நம்பிக்கையில்லை -காங். தலைவர் கார்கே

தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்...சாய் தன்ஷிகா

அம்பேத்கரின் தேவை முன்னெப்போதையும் விட கூடுதலாக உள்ளது: கமல்ஹாசன்

SCROLL FOR NEXT