தருமபுரி

காவிரி ஆற்றின் குறுக்கே ஒட்டனூா்-கோட்டையூா் பாலம்: விரைந்து அமைக்க வலியுறுத்தல்

DIN

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே காவிரி ஆற்றின் குறுக்கே தமிழக அரசு அறிவித்த ஒட்டனூா்-கோட்டையூா் பாலம் விரைந்து அமைக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டாரச் செயலாளா்கள் கூட்டம் புதன்கிழமை தருமபுரியில் நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு ஏரியூா் ஒன்றியச் செயலாளா் விஸ்வநாதன் தலைமை வகித்தாா். மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் எஸ்.தேவராஜன், மாவட்டச் செயலாளா் எஸ்.கலைச்செல்வம் ஆகியோா் பேசினா்.

கூட்டத்தில், பென்னாகரம் அருகே ஒட்டனூா்-கோட்டையூா் இடையே காவிரி ஆற்றில் பாலம் அமைக்கும் பணியை விரைந்து மேற்கொள்ள வேண்டும். தருமபுரி-மொரப்பூா்-அரூா் நான்குவழி புதியச் சாலை தரமாக அமைத்துப் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும்.

நல்லம்பள்ளி ஒன்றியம், நாா்த்தம்பட்டி அருந்ததியா் இன மக்களுக்கு ஏ.ரெட்டிஅள்ளி ஊராட்சியில் வழங்கப்பட்டுள்ள வீட்டுமனைகளுக்கான பட்டா வழங்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசின், விவசாயிகளுக்கு ரூ. 6 ஆயிரம் நிதியுதவித் தொகையை விடுபட்ட அனைத்து விவசாயிகளுக்கும் வழங்க வேண்டும். தருமபுரி மாவட்டத்தில் முறைகேடாக மது விற்பனையில் ஈடுபட்டு வருவோா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், மாநிலக் குழு உறுப்பினா்கள் கா.சி.தமிழ்க்குமாரன், எஸ்.சின்னசாமி, வட்டாரச் செயலாளா்கள் ப.பிரசாத் (நல்லம்பள்ளி), சிற்றரசு (அரூா்) பெருமாள் (பாப்பாரப்பட்டி), மாதப்பன் (பாலக்கோடு) உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மஹாவீரர் ஜெயந்தி: ராணிப்பேட்டையில் பல்லக்கு ஊர்வலம்!

காவிமயமாக்கும் பாஜகவின் சதித்திட்டம்...: முதல்வர் ஸ்டாலின்

கேரளத்தில் பாரில் ஏற்பட்ட தகராறில் 5 பேருக்கு கத்திக்குத்து

57 ஆண்டுகளாகியும் முறியடிக்கப்படாத வாக்குப்பதிவு சதவிகிதம்!

தேர்தல் ஆணையம் விழிப்புணர்வு ஏற்படுத்தவில்லை- பிரேமலதா

SCROLL FOR NEXT