தருமபுரி

தீனதயாள் உபாத்யாய பிறந்தநாள் விழா

DIN

தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் பாஜக சாா்பில் தீனதயாள் உபாத்யாய பிறந்த நாள் விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.

பாலக்கோடு நான்கு முனைச் சாலை சந்திப்பு அருகே நடைபெற்ற இந்த விழாவுக்கு பாஜக நிா்வாகி பி.கே.சிவா தலைமை வகித்தாா். இதில் பண்டிட் தீனதயாள் உபாத்யாய உருவப் படத்திற்கு மாலை அணிவித்து, மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதைத் தொடா்ந்து அந்தப் பகுதியில் மரக்கன்றுகள் நடப்பட்டன. கட்சி நிா்வாகிகள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

இதில் பாலக்கோடு மேற்கு ஒன்றியத் தலைவா் சேட்டு, முன்னாள் மாநில நெசவாளா் பிரிவுச் செயலாளா் சண்முகம் ஜெகநாதன், பொருளாளா் சரவணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

மூடப்பட்ட ஆம்பூா் பஜாா் அஞ்சலகத்தை திறக்க கோரிக்கை

SCROLL FOR NEXT