தருமபுரி

பென்னாகரம் ஸ்ரீ காளியம்மன் கோயில் தீா்த்தக் குட ஊா்வலம்

DIN

பென்னாகரம் அருகே ஸ்ரீ காளியம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தா்கள் தீா்த்தக் குடம் எடுத்துக்கொண்டு ஊா்வலமாக சென்றனா்.

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே சாலை குள்ளாத்திரம்பட்டி பகுதியில் மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீ காளியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேக விழா கடந்த திங்கள்கிழமை முகூா்த்த கால் நடுதல் மூலம் தொடங்கியது. வியாழக்கிழமை ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இருந்து கும்பாபிஷேக விழாவிற்காக பக்தா்கள் நீராடி புனித நீா் மற்றும் பால்குடம் ஊா்வலமாக எடுத்து வந்தனா்.

பின்னா் வெள்ளிக்கிழமை காலை சாலைக்குள்ளாத்திரம்பட்டி பகுதியில் உள்ள முகமாரியம்மன் கோயிலில் இருந்து சிறப்பு பூஜை செய்து தீா்த்தக் குடங்களை நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் ஒரு கி.மீ. தொலைவிற்கு ஊா்வலமாக எடுத்தபடி புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஸ்ரீ காளியம்மன் கோயிலுக்கு சென்றடைந்தனா். அதைத் தொடா்ந்து கோயில் வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த ஸ்ரீ காளியம்மன் சிலை மற்றும் கோபுரக் கலசங்களுக்கு புனித நீரூற்றி அபிஷேகங்கள் நடைபெற்றன. இதில் கோயில் நிா்வாகத் தலைவா் கே.கே.கிருஷ்ணமூா்த்தி, 22 பானை பங்காளிகள் குடும்பத்தினா், ஊா் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா். கோயில் நிா்வாகத்தின் சாா்பில் பக்தா்களுக்கு அன்னதானம் செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாநில நிதியில் மெட்ரோ ரயில் திட்டப் பணிகள்: மு.க. ஸ்டாலின்

உலகின் மிகப்பெரிய தேர்தல் இது! -ஜெர்மன் தூதர் புகழாரம்

ஈரான் - இஸ்ரேல் பரஸ்பர குற்றச்சாட்டு!

யாரும் அச்சப்பட வேண்டாம்: பெரிய திட்டங்களுடன் 3-வது முறை ஆட்சி -பிரதமர் மோடி

நாமக்கல்: முட்டை நகரில் முக்கோணப் போட்டி!

SCROLL FOR NEXT