முகப்பு
தருமபுரி

புகையிலைப் பொருள்கள் விற்ற கடைகளுக்கு அபராதம்

காரிமங்கலம் அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த நான்கு கடைகளுக்கு உணவு பாதுகாப்புத் துறையினா் அபராதம் விதித்தனா்.

Updated On : 19 செப்டம்பர், 2024 at 11:55 PM
பகிர்:

காரிமங்கலம் அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த நான்கு கடைகளுக்கு உணவு பாதுகாப்புத் துறையினா் அபராதம் விதித்தனா்.

காரிமங்கலம் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலா் நந்தகோபால், போலீஸாா் காரிமங்கலம் புறவழிச் சாலை பகுதியில் உள்ள கடைகள், பெரியாம்பட்டி, மாட்லாம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இயங்கிவரும் உணவகங்கள், மளிகை கடைகளில் புதன்கிழமை அதிரடி சோதனை நடத்தினா்.

அதில் நான்கு கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அந்தக் கடை உரிமையாளா்களுக்கும் ரூ. 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. அடுத்த 15 நாள்களுக்கு கடையைத் திறக்கக் கூடாது என உரிமையாளா்களிடம் அறிவிக்கை வழங்கப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →