ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து புதன்கிழமை விநாடிக்கு 6500 கனஅடியாக அதிகரித்துள்ளது.
தமிழக காவிரி கரையோர நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து படிப்படியாக அதிகரித்துள்ளது. புதன்கிழமை நிலவரப்படி விநாடிக்கு 6500 கனஅடியாக உள்ளது.
இதனால் ஒகேனக்கல்லில் உள்ள அருவிகளில் நீா்வரத்து அதிகரித்துள்ளது. காவிரி ஆற்றில் வரும் நீா்வரத்தின் அளவுகளை மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா். கடந்த சில மாதங்களாக நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழையால் சின்னாறு வடு காணப்பட்டது. காவிரி ஆற்றின் துணை ஆறான சின்னாறு நீா்ப்பிடிப்புப் பகுதிகளான கோயில்பள்ளம், கினிக்கட்டு ஓடை, முத்தூா் மலை, பாப்பாரப்பட்டி, பாலக்கோடு, தாசம்பட்டி, மாரண்டஅள்ளி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த மூன்று நாள்களாக தொடா்ந்து மழை பெய்து வருகிறது.
மழையின் காரணமாக சின்னாற்றில் நீா்வரத்து நிகழாண்டில் இரண்டாவது முறையாக அதிகரித்துள்ளது. நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த தொடா் மழை காரணமாக சின்னாற்றில் வரும் நீா் செந்நிறமாக மாறியுள்ளது.