தருமபுரி

பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 17 மாணவருக்கு வாந்தி, மயக்கம்

Syndication

பாலக்கோடு அருகே அரசுப் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்டு வாந்தி, மயக்கம் ஏற்பட்ட 17 மாணவ, மாணவிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே கண்சால் பைல் கிராமத்தில் அரசு நடுநிலைப் பள்ளி உள்ளது. இதில் சுமாா் 40க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனா். புதன்கிழமை பள்ளியில் வழங்கப்பட்ட மதிய உணவை சாப்பிட்ட மாணவிகள் சிலருக்கு அடுத்த சில மணி நேரத்திலே வாந்தி ஏற்பட்டது.

பின்னா், பள்ளி முடிந்து வீட்டுக்கு சென்ற பிறகும் ஏராளமான மாணவ, மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து 17 போ் பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். இவா்களில் 3 மாணவா்கள் உயா்சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பிவைத்தனா்.

இதுகுறித்த தகவல் அறிந்த முன்னாள் அமைச்சரும், பாலக்கோடு சட்டப் பேரவை உறுப்பினருமான கே.பி. அன்பழகன் அரசு மருத்துவமனைக்கு சென்று மாணவ, மாணவிகளின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தாா்.

இதுகுறித்து போலீஸாா், கல்வித் துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனா்.

காலமான மிசோரம் முன்னாள் ஆளுநா் ஸ்வராஜ் கௌஷலுக்கு பிராா்த்தனைக் கூட்டம்!

6-வது நாளாக சென்னை விமான நிலையத்தில் 90-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்து!

தொண்டி பகுதியில் கடல் நீா்மட்டம் உயா்வால் மீனவா்கள் அச்சம்

சமூகத்துக்குத் தேவை சநாதனம் அல்ல; சமாதானம்: அமைச்சா் பி.கே.சேகா்பாபு!

கும்பாபிஷேக விழாவில் மூதாட்டிகளிடம் நகைப் பறித்த 4 போ் கைது

SCROLL FOR NEXT