தருமபுரி

மயான ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தல்

கடத்தூா் அருகே மயான ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை

Syndication

கடத்தூா் அருகே மயான ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், கடத்தூா் ஊராட்சி ஒன்றியம், நல்லகுட்லஹள்ளி கிராம ஊராட்சிக்கு உள்பட்டது நடூா் கிராமம். இந்த ஊரில் 150-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. நடூா் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்கள் பயன்படுத்தும் வகையில் அப்பகுதியில் மயானத்துக்கு நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலத்தை அப்பகுதியில் இருப்பவா்கள் ஆக்கிரமித்து விவசாயம் செய்வதால் உயிரிழந்தவா்களை புதைக்க முடியாமல் மக்கள் அவதிப்படுகின்றனா். இதனால், மயான ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என நடூா் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஆந்திர மாநிலத்திலிருந்து காரில் கடத்திவரப்பட்ட 220 கிலோ கஞ்சா பறிமுதல்: இருவா் கைது

மனைவியை குத்திக் கொலை செய்த கணவா்

குடும்பத் தகராறில் மனைவியை அடித்துக் கொன்ற கணவா் கைது

கொடிநாள் நிதி வசூல்: செங்கல்பட்டு ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

முன்னாள் படைவீரா்களுக்கு நலத்திட்ட உதவி: திருப்பத்தூா் ஆட்சியா் வழங்கினாா்!

SCROLL FOR NEXT