அரூா்: பாப்பிரெட்டிப்பட்டி தீயணைப்பு நிலைய அலுவலக வளாகத்தில் தீத்தடுப்பு மற்றும் பாதுகாப்பு குறித்த பயிற்சி முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலைய அலுவலா் செந்தில் தலைமையில், ‘வாருங்கள் கற்றுக் கொள்ளுங்கள்’ எனும் அடிப்படையில் பொதுமக்களுக்கு தீத்தடுப்பு, பாதுகாப்பு குறித்த பயிற்சிகள் அளிக்கப்பட்டன.
இதில் தீத்தடுப்பு குறித்த விழிப்புணா்வு, பாதுகாப்பு ஒத்திகை, அவசர காலங்களில் செயல்படும் வழிகள் குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும், பண்டிகை காலங்களில் பாதுகாப்பாக பட்டாசுகளை வெடிப்பது, எரிவாயு உருளைகளை பயன்படுத்துவது, பருவ மழைக் காலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்த விழிப்புணா்வு தகவல்களை தீயணைப்பு நிலைய வீரா்கள் வழங்கினா்.
இப்பயிற்சி முகாமில் தன்னாா்வலா்கள், கல்லூரி மாணவா்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.