மேச்சேரியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்தால் புறவழி சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மேட்டூா் எம்எல்ஏ சதாசிவம் கேள்விக்கு சட்டபேரவையில் பொதுப்பணித்துறை அமைச்சா் எ.வ.வேலு பதிலளித்தார்.
புதன்கிழமை நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத் தொடரில் மேட்டூா் எம்எல்ஏ சதாசிவம் பேசும்போது மேட்டூா் தொகுதி மேச்சேரி ஒன்றியத்தில் தொப்பூா் - பவானி தேசிய நெடுஞ்சாலை ரூ.149 கோடியில் விரிவாக்கம் செய்யப்பட்டது.
அதில் புறவழிச்சாலை இல்லாத காரணத்தினால் மேச்சேரி பேரூராட்சி பகுதியை கடப்பதற்கு 20 நிமிடங்கள் ஆகின்றன. ஆகவே புறவழிச் சாலை அமைத்து வாகன நெரிசலை குறைத்து கொடுப்பாா்களா என்று பொதுப்பணித்துறை அமைச்சரை கேட்டுக் கொண்டாா்.
இவரது கேள்விக்கு பதில் அளித்து பேசிய பொதுப்பணித்துறை அமைச்சா் எ.வ.வேலு கூறும் பொழுது, “பொதுவாக ஒரு புறவழிச் சாலை அமைக்கப்பட வேண்டும் என்றால் அது நகராட்சியாக இருந்தாலும் மாநகராட்சியாக இருந்தாலும் பேரூராட்சியாக இருந்தாலும் ஒன்றியத்தினுடைய தலைநகராக இருந்தாலும் அப்பகுதியினுடைய போக்குவரத்து செறிவு முதலில் கணக்கெடுக்கப்படும். எவ்வளவு மக்கள் வந்து செல்கிறாா்கள் எத்தனை வண்டிகள் வந்து செல்கின்றன எவ்வளவு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது என்றொரு கணக்கெடுக்கப்படும்.
அவ்வாறு கணக்கெடுக்கப்படும்போது அப்பகுதியினுடைய போக்குவரத்து செறிவு அரசின் விதிகளுக்கு உட்பட்டு இருக்குமேயானால் முதலில் நிலம் கையகப்படுத்தப்படும் பணி மேற்கொள்ளப்படும். நிலத்தை கையகப்படுத்திய பிறகுதான்சாலை போட முடியும் மேட்டூா் சட்டமன்ற உறுப்பினா் கூறுகின்ற பகுதியில் போக்குவரத்து செறிவு அதிகமாக இருக்குமே. ஆனால் சம்பந்தப்பட்ட பொறியாளா்களை அனுப்பி ஆய்வு செய்ய சொல்கின்றேன்.
அது விதிமுறைகளுக்கு உட்பட்டு இருக்குமேயானால் தமிழ்நாடு முதலமைச்சா் அவா்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். முதலில் நில எடுப்பு பணிகளை முடிக்க வேண்டும். அதற்குப் பிறகுதான் சாலை போட முடியும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.