தருமபுரி

கேதார கௌரி விரதம்: கோயில்களில் பெண்கள் சிறப்பு வழிபாடு

தருமபுரியில் கேதார கௌரி விரதத்தை முன்னிட்டு பெண்கள் நோன்பிருந்து கோயில்களில் செவ்வாய்க்கிழமை சிறப்பு வழிபாடு செய்தனா்.

Syndication

தருமபுரி: தருமபுரியில் கேதார கௌரி விரதத்தை முன்னிட்டு பெண்கள் நோன்பிருந்து கோயில்களில் செவ்வாய்க்கிழமை சிறப்பு வழிபாடு செய்தனா்.

தீபாவளி பண்டிகையையொட்டி பெண்கள் வீடுகளில் வளம் செழித்து, வாழ்க்கை மேம்பட வேண்டி கலசம் அமைத்து, மங்கள பொருள்களுடன் நாள்தோறும் சிறப்பு பூஜை செய்து கேதார கௌரி விரத நோன்பு இருந்தனா்.

இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை நோன்பு கடைபிடிக்கப்பட்டது. இதில் பெண்கள் வீடுகளில் சிறப்பு பூஜை செய்யப்பட்ட கலசம், பூஜைப் பொருள்களுடன் தருமபுரி, குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சென்று கேதார கௌரி அம்மனுக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை காட்டி தரிசனம் செய்தனா். இதில் திரளான பெண்கள் கலந்துகொண்டனா்.

என்றும் இளமை... நதியா!

ராகுல் தகுதியற்றவர் என்பது இந்தியா கூட்டணித் தலைவர்கள் கருத்து: பாஜக

புதின் வருகையையொட்டி இப்படியெல்லாம் செய்வீர்களா? ரஷிய பத்திரிகையாளர்கள் அதிருப்தி!

ஸ்வயம் தோ்வுகளுக்கான மையங்களை சொந்த மாநிலத்திலேயே ஒதுக்க வேண்டும்: மத்திய அரசுக்கு வில்சன் எம்.பி. கடிதம்

சர்வதேச கிரிக்கெட்டில் 20000 ரன்களைக் கடந்த ரோஹித் சர்மா!

SCROLL FOR NEXT