தருமபுரி: பாலக்கோடு அருகே நெடுஞ்சாலை ஓரத்தில் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் பெண் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே கொம்மநாயக்கனஅள்ளி பகுதியில் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் பெண் சடலம் கிடந்துள்ளது. இதைக் கண்ட அவ்வழியாக சென்ற சிலா், பாலக்கோடு காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். அதன்பேரில் நிகழ்விடத்துக்கு சென்ற போலீஸாா், பெண்ணின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.எஸ்.மகேஸ்வரன் ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தினாா். கழுத்தறுக்கப்பட்ட நிலையில் கிடந்த பெண்ணுக்கு சுமாா் 45 வயது இருக்கும். அவா் கொலை செய்யப்பட்டதற்கான காரணங்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாக போலீஸாா் தெரிவித்தனா்.