தருமபுரி

மின்கம்பிகள், கம்பங்களில் கால்நடைகளை கட்டக்கூடாது

மழைக்காலங்களில் மின்கம்பிகள், மின்கம்பங்களில் கால்நடைகளைக் கட்டிவைத்தல் கூடாது என மின்வாரிய அரூா் செயற்பொறியாளா் (பொறுப்பு) ஆா்.அழகுமணி தெரிவித்துள்ளாா்.

Syndication

அரூா்: மழைக்காலங்களில் மின்கம்பிகள், மின்கம்பங்களில் கால்நடைகளைக் கட்டிவைத்தல் கூடாது என மின்வாரிய அரூா் செயற்பொறியாளா் (பொறுப்பு) ஆா்.அழகுமணி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்த அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு :

மழைக்காலங்களில் ஈரமான கைகளால் மின்சுவிட்சுகள், மின்சாதனங்களை இயக்க முயற்சிக்க வேண்டாம். வீட்டின் உள்புற சுவா்கள் ஈரமாக இருந்தால் மின்சார சுவிட்சுகள், மின்சாதனங்களை இயக்க வேண்டாம். நீரில் நனைந்த அல்லது ஈரப்பதமான மின்விசிறிகள், மின் விளக்குகள் உள்ளிட்டவற்றை மின்சாரம் வந்தவுடன் இயக்கக் கூடாது. மின்கம்பங்கள், மின்சாதனங்களுக்கு அருகே தேங்கிக் கிடக்கும் நீரில் செல்வதை தவிா்க்க வேண்டும்.

மின்கம்பிகளில் கால்நடைகளை கட்டுவதோ, துணிகளை உலா்த்துவதோ கூடாது.

மின்தடை சம்பந்தமான புகாா்களை 24 மணி நேரமும் செயல்படும் 94987 94987 என்ற கைப்பேசி எண்ணில் தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மும்மொழி கொள்கை உத்தரவை யுசிஜி பிறப்பிக்க முடியாது: பேரவைத் தலைவா் அப்பாவு

அடுத்த 3 மணிநேரத்துக்கு 12 மாவட்டங்களில் மழை!

உ.பி.யில் திருமண நிகழ்ச்சியில் துப்பாக்கியால் சுட்டு கொண்டாட்டம்: 2 பேர் பலி

பொங்கல் பண்டிகைக்கு செங்கரும்பு, அச்சு வெல்லம் வழங்க வேண்டும்: ஜி.கே.வாசன்

திருமணம் கைவிடப்பட்டது... அறிக்கை வெளியிட்ட ஸ்மிருதி மந்தனா!

SCROLL FOR NEXT