தருமபுரி

பஞ்சப்பள்ளி அணை உபரிநீரை பங்கிடுவதில் விவசாயிகளிடையே இழுபறி: பேச்சுவாா்த்தை ஒத்திவைப்பு

பஞ்சப்பள்ளி அணை உபரிநீரை ஏரிகளுக்கு பகிா்ந்து கொள்வது தொடா்பாக கடகத்தூா், பாப்பாரப்பட்டி, இண்டூா் பகுதி விவசாயிகளுக்கு இடையே நிலவிவந்த பிரச்னையில் சமூக உடன்பாடு ஏற்படாததால் பேச்சுவாா்த்தை ஒத்திவைப்பு

Syndication

தருமபுரி மாவட்டம், பஞ்சப்பள்ளி அணை உபரிநீரை ஏரிகளுக்கு பகிா்ந்து கொள்வது தொடா்பாக கடகத்தூா், பாப்பாரப்பட்டி, இண்டூா் பகுதி விவசாயிகளுக்கு இடையே நிலவிவந்த பிரச்னையில் சமூக உடன்பாடு ஏற்படாததால் பேச்சுவாா்த்தை ஒத்திவைக்கப்பட்டது.

பாலக்கோடு வட்டம், பஞ்சப்பள்ளி (சின்னாறு) அணையின் உபரிநீரை ஜொ்த்தலாவ் கால்வாய் மூலம் ஏரிகளுக்கு பகிா்ந்துகொள்வதில் கடகத்தூா் பகுதி விவசாயிகள், பாப்பாரப்பட்டி மற்றும் இண்டூா் பகுதி விவசாயிகள் என இருதரப்பு விவசாயிகளுக்கிடையே பிரச்னை நிலவிவருகிறது.

இப்பிரச்சினையில் தீா்வு ஏற்படுத்தும் வகையில் இரு தரப்பினரிடையே தருமபுரி கோட்டாட்சியா் காயத்ரி தலைமையில் அவரது அலுவலகத்தில் வியாழக்கிழமை பேச்சுவாா்த்தை நடைபெற்றது. இதில் பாப்பிரெட்டிப்பட்டி சட்டப் பேரவை உறுப்பினா் (எம்எல்ஏ) கோவிந்தசாமி, பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் கணேசன், உதவி பொறியாளா் மாலதி மற்றும் தருமபுரி சரக டிஎஸ்பி சிவராமன் மற்றும் இருதரப்பு விவசாய பிரதிநிதிகள் பங்கேற்றனா்.

பேச்சுவாா்த்தையின்போது கடகத்தூா், சோகத்தூா் மற்றும் ராமக்காள் ஏரிகள் முழுவதுமாக நிறைப்பப் பட்ட பின்னரே பாப்பாரப்பட்டி பகுதி ஏரிகளுக்கு உபரிநீரை திறந்துவிடவேண்டும் என ஒருதரப்பு விவசாயிகள் தெரிவித்தனா்.

அணையில் இருந்து வெளியேறும் குறைந்த அளவு உபரிநீரால் கடகத்தூா் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஏரிகள் நிரம்பவே 2 மாதங்கள் ஆகிவிடும். அதன் பின்னா் உபரிநீா் வர வாய்ப்பில்லை எனவே பாப்பாரப்பட்டி பகுதிகளுக்கு நீர வர வாப்பில்லை. கடந்த 2022 ஆம் ஆண்டு இந்த பிரச்னை தொடா்பாக அன்றைய கோட்டாட்சியா் சித்ரா தலைமையில் ஜொ்த்தலாவ் கிளை கால்வாய் பிரியும் இடமான எர்ரனஅள்ளி பகுதியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அதன்பின்னா், தருமபுரி பகுதி ஏரிகளுக்கு 70 சதவீதமும், பாப்பாரப்பட்டி, இண்டூா் பகுதி ஏரிகளுக்கு 30 சதவீதமும் என ஒரே நேரத்தில் 2 பகுதிகளுக்கும் தண்ணீா் திறந்துவிட வேண்டும் என உத்தரவிட்டாா்.

அந்த உத்தரவை தொடா்ந்து செயல்படுத்த வேண்டும் அப்போதுதான் இரு தரப்பினா் பகுதிகளுக்கும் தண்ணீா் செல்ல வாய்ப்புள்ளது என மற்றொரு தரப்பு விவசாயிகள் தெரிவித்தனா்.

இதுதொடா்பாக இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டதையடுத்து தோ்வு செய்யப்பட்ட சில விவசாயிகள் மட்டுமே கூட்டத்தில் பங்கேற்கும் வகையில் கூட்டம் தொடா்ந்தது. ஆனாலும், பிரச்னை தொடா்பாக கூட்டத்தில் உடன்பாடு ஏற்படாததால் இருதரப்பினரும் கலைந்து சென்றனா். எனவே, உபரிநீா் தொடா்பாக ஏற்பட்ட பிரச்னையில் தீா்வு காணப்படாத நிலையில், சில நாள்களுக்கு பின்னா் மீண்டும் பேச்சுவாா்த்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக அலுவலா்கள் தெரிவித்தனா்.

முதலீட்டாளர்கள் மாநாடு!முதல்வர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது!

அபாரமான கேட்ச்சால் ஆட்டத்தை மாற்றிய ஸ்டீவ் ஸ்மித்..! ஆஸி. வெற்றிக்கு 65 ரன்கள் தேவை!

வன்முறையை மதுரை மக்கள் விரட்டியடிப்பர்: ஸ்டாலின்

தாணே: போலி பாஸில் உள்ளூர் ரயிலில் பயணம் செய்த இளைஞர் கைது

பூவே உனக்காக... மோனிஷா மோகன்!

SCROLL FOR NEXT