போச்சம்பள்ளி அருகே கிரைண்டர் கல்லால் மனைவியை தாக்கிய கணவனை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
போச்சம்பள்ளியை அடுத்த குள்ளம்பட்டி கிராமத்தில் வசித்து வந்த முருகன் உணவகத்தில் மாஸ்டர் வேலை செய்து வந்தார். இவருக்கும், போச்சம்பள்ளியை அடுத்த சின்னபாரண்டப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த சென்றாயன் மகள் தெய்வானை (37) என்பவருக்கும் 10 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி, இரண்டு ஆண் குழந்தைகளும், இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். திருமணத்துக்கு பிறகு மனைவியின் வீட்டிலேயே குடியிருந்து வந்துள்ளனர்.
மூன்று நாள்களுக்கு முன் சங்கத்தில் பணம் பெற்ற தெய்வானையிடம், அந்த பணத்தை வைத்து புதிதாக உணவகம் தொடங்கலாம் என முருகன் பணம் கேட்டுள்ளார். அதற்கு தெய்வானை வங்கியில் உள்ள நகைகளை மீட்க வேண்டும் அதனால் பணம் தரமுடியாது என்று கூறினாராம். இதனால் இருவருக்குமிடையே ஏற்பட்ட தகராறில், மனைவியின் மீது கிரைண்டர் கல்லை முருகன் போட்டாராம். இதனால் தலையில் பலத்த காயமடைந்த தெய்வானையை அக்கம்பக்கத்தினர் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அவர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புகாரின் பேரில் போச்சம்பள்ளி காவல் ஆய்வாளர் மனோகரன் வழக்கு பதிவுப் செய்து முருகனை கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.