கிருஷ்ணகிரியில் அகில இந்திய மாங்கனி கண்காட்சி ஜூன் 17-ஆம் தேதி தொடங்க உள்ளது.
கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் 25-ஆவது அகில இந்திய மாங்கனி கண்காட்சியானது சனிக்கிழமை மாலை 3.30 மணிக்கு தொடங்க உள்ளது. இந்தக் கண்காட்சியில் 50 அரசு அரங்குகள், பல்வேறு அரசுத் துறைகளின் சாதனை விளக்க 36 அரங்குகள், 80 தனியார் அரங்குகள் அமைக்கப்பட உள்ளன. மேலும், கேளிக்கை அரங்குகள், தின்பண்டக் கடைகள் அமைய உள்ளன. இந்தக் கண்காட்சியானது ஜூலை 10-ஆம் தேதி நிறைவு பெறுகிறது. இந்தக் கண்காட்சி அமைய உள்ள இடத்தை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன், புதன்கிழமை ஆய்வு செய்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.