ஊத்தங்கரை சீனிவாசா நகரில் உள்ள அதியமான் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளங்கலை முதலாமாண்டில் சேர்ந்த மாணவிகளுக்கு பூங்கொத்து கொடுத்து புதன்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.
விழாவுக்கு அதியமான் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் சீனி.திருமால் முருகன் தலைமை வகித்தார். கல்லூரிச் செயலாளர் ஷோபா திருமால்முருகன், நிர்வாக அலுவலர் சீனி. கணபதிராமன், கல்லூரி முதல்வர் முனைவர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்து குத்து விளக்கேற்றி விழாவைத் தொடங்கி வைத்தனர்.
நிகழ்ச்சியின் தொடக்கமாக தமிழ்த் துறை உதவிப் பேராசிரியர் தமிழரசி வரவேற்றார். கல்லூரித் தாளாளர் தலைமை வகித்துப் பேசினார். செயலர், அனைத்துத் துறைப் பேராசிரியர்கள் கல்வி மற்றும் வேலைவாய்ப்புக் குறித்துப் பேசினர். விழாவுக்கு வந்த பெற்றோர், மாணவிகள் கல்லூரியின் சிறப்பு அம்சங்களைக் கேட்டறிந்தனர். மேரி ஜெஸிந்தா நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.