கிருஷ்ணகிரி

ஒசூர் தமிழ் வளர்ச்சி மன்ற நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

ஒசூர் தமிழ் வளர்ச்சி மன்றத்திலிருந்து பிரிந்து சென்ற முன்னாள் நிர்வாகிகள் அனைவரும் மீண்டும் இணைய வேண்டும் என

தினமணி

ஒசூர் தமிழ் வளர்ச்சி மன்றத்திலிருந்து பிரிந்து சென்ற முன்னாள் நிர்வாகிகள் அனைவரும் மீண்டும் இணைய வேண்டும் என முன்னாள் எம்எல்ஏவும், ஒசூர் தமிழ் வளர்ச்சி மன்றத்தின் கெüரவத் தலைவருமான கே.ஏ.மனோகரன் வலியுறுத்தினார்.
 ஒசூர் தமிழ் வளர்ச்சி மன்றத்தின் புதிய நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், புதிய பெயர் பலகை திறப்பு விழா முன்னாள் எம்எல்ஏ கே.ஏ.மனோகரன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.
 அப்போது அவர் பேசியது: ஒசூர் தமிழ் வளர்ச்சி மன்றம் துவங்கி 50 ஆண்டுகள் ஆகிறது. இந்த 50-ஆவது ஆண்டு விழா மிகவும் சிறப்பான முறையில் பேச்சுப் போட்டி, பட்டிமன்றம், கவிதை அரங்கம், கலை அரங்கம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை செம்மையாக நடத்த வேண்டும்.
 புதிதாக ஒசூர் தமிழ் வளர்ச்சி மன்றத்தின் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள முன்னாள் நகராட்சித் தலைவர் குருசாமி, செயலாளர் மாரிமுத்து ஆகியோர் ஒசூர் தமிழ் வளர்ச்சி மன்றத்திலிருந்து பிரிந்து சென்ற நிர்வாகிகளை மீண்டும் மன்றத்தில் இணைத்து ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார். விழாவில் திமுக மாவட்ட இலக்கிய அணித் தலைவர் எல்லோரா.மணி, முன்னாள் சென்னத்தூர் ஊராட்சித் தலைவர் ராமாஞ்சிரெட்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

என்றும் இளமை... நதியா!

ராகுல் தகுதியற்றவர் என்பது இந்தியா கூட்டணித் தலைவர்கள் கருத்து: பாஜக

புதின் வருகையையொட்டி இப்படியெல்லாம் செய்வீர்களா? ரஷிய பத்திரிகையாளர்கள் அதிருப்தி!

ஸ்வயம் தோ்வுகளுக்கான மையங்களை சொந்த மாநிலத்திலேயே ஒதுக்க வேண்டும்: மத்திய அரசுக்கு வில்சன் எம்.பி. கடிதம்

சர்வதேச கிரிக்கெட்டில் 20000 ரன்களைக் கடந்த ரோஹித் சர்மா!

SCROLL FOR NEXT