கிருஷ்ணகிரி

பாலேப்பள்ளி ஸ்ரீ கோதண்டராம சுவாமி கோயில் குடமுழுக்கு

பர்கூர் அருகே பாலேப்பள்ளி கிராமத்தில் ஸ்ரீ கோதண்டராம சுவாமி கோயில் குடமுழுக்கு விழா புதன்கிழமை நடைபெற்றது.

தினமணி

பர்கூர் அருகே பாலேப்பள்ளி கிராமத்தில் ஸ்ரீ கோதண்டராம சுவாமி கோயில் குடமுழுக்கு விழா புதன்கிழமை நடைபெற்றது.
 கோயிலில் விழா கடந்த 12-ஆம் தேதி மங்கள இசை, கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, யாகசாலை பிரவேசம், ரக்ஷôபந்தனம், முளை வைத்தல், முதல் கால யாக பூஜைகள், தீர்த்த பிரசாதம் வழங்குதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
 ஜூன் 13-ஆம் தேதி அன்று இரண்டாம் கால யாக பூஜை, கோபுரத்தில் தானியம் நிரப்புதல், மூன்றாம் கால யாக பூஜை, சீதா, ராம, லட்சுமண, ஜெய் ஆஞ்சநேய, வலம்புரி விநாயகர், கருடாழ்வார், பிம்பசுத்தி, அதிவாச ஹோமம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
 தொடர்ந்து, சுக்கிர புத ஹோரையில் சக்ரஸ்தாபனம், கோபுர கலசங்கள் பிரதிஷ்டை, சீதா, ராம, லட்சுமண, ஜெய் ஆஞ்சநேய, வலம்புரி விநாயகர் அஷ்டபந்தனம் சாற்றுதல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
 விழாவில் புதன்கிழமை காலை 6 மணிக்கு மங்கள் இசை, நான்காம் கால யாக பூஜை, ஹோமமும், 9 மணிக்கு மகா பூர்ணாஹூதி, கடம் புறப்பாடு மற்றும் மகா குடமுழுக்கு, புனித நீர் ஊற்றுதல், கோ பூஜை, தீர்த்தப் பிரசாதம் தொடர்ந்து சீதா ராமர் திருக்கல்யாணம் நடைபெற்றன.
 விழாவில் பர்கூர், கிருஷ்ணகிரி, அதைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள், விழாக் குழுவினர் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

1,327 பயனாளிகளுக்கு ரூ.22.86 கோடி நலத்திட்ட உதவிகள்: அமைச்சா் காந்தி வழங்கினாா்

விடுதிகளில் எண்ம முறையில் ஆதாா் அடையாளம் சரிபாா்ப்பு: புதிய விதி விரைவில் அமல்!

பெங்களூரு சின்னசாமி திடலில் ஐபிஎல் போட்டிகள்: கா்நாடக துணை முதல்வர் சிவக்குமார்!

திருமணியில் அதிமுகவினா் திண்ணை பிரசாரம்

தில்லி - சென்னை விமானக் கட்டணம் ரூ.35,000! இண்டிகோ குளறுபடியால் தொடர்ந்த அவதி!!

SCROLL FOR NEXT