பர்கூர் அருகே ஆந்திர மாநிலத்துக்கு காரில் ரேஷன் அரிசியை கடத்த முயன்ற இருவரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி உணவு பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு ஆய்வாளர் முருகன் தலைமையில் போலீஸார் பர்கூர் - குப்பம் சாலையில் உள்ள கணமூர் பேருந்து நிறுத்தம் அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்ததில் 50 கிலோ எடையில் 20 மூட்டைகளில் ஒரு டன் எடை கொண்ட ரேஷன் அரிசி கடத்துவது தெரியவந்தது. இதையடுத்து அந்த காரை ஓட்டி வந்த ஓட்டுநரான பர்கூரை அடுத்த நேரலகோட்டையைச் சேர்ந்த முருகன் (40), எமக்கல்நத்தம் கிராமத்தைச் சேர்ந்த முருகன் (25) ஆகிய இருவரை போலீஸார் கைது செய்தனர். விசாரணையில் இவர்கள் இருவரும் ரேசன் அரிசியை ஆந்திராவிற்கு கடத்துவது தெரியவந்தது. கடத்தலுக்கு பயன்படுத்திய கார், ரேஷன் அரிசி ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.