கிருஷ்ணகிரி

அரசு விளையாட்டு விடுதியில் சேர கைப்பந்து வீரர்கள், வீராங்கனையர் தேர்வு

தமிழகத்தில் உள்ள அரசு விளையாட்டு விடுதிகளில் சேர கைப்பந்து விளையாட்டுக்கான வீரர்கள், வீராங்கனையருக்கான தேர்வு கிருஷ்ணகிரியில் புதன்கிழமை நடைபெற்றது.

தினமணி

தமிழகத்தில் உள்ள அரசு விளையாட்டு விடுதிகளில் சேர கைப்பந்து விளையாட்டுக்கான வீரர்கள், வீராங்கனையருக்கான தேர்வு கிருஷ்ணகிரியில் புதன்கிழமை நடைபெற்றது.
 தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் பல்வேறு விளையாட்டுகளுக்கான விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த விளையாட்டு விடுதிகளில் சேர கைப்பந்து விளையாட்டுக்கான வீரர்கள், வீராங்கனையருக்கான தேர்வு கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில் கடந்த 15-ஆம் தேதி தொடங்கியது.
 அதன்படி, மே 15-ஆம் தேதி நடைபெற்ற தேர்வில் 7-ஆம் வகுப்பு பயிலும் 9 மாணவர்கள், 6 மாணவியர், 16-ஆம் தேதி 8-ஆம் வகுப்பு பயிலும் 20 மாணவர்கள், 7 மாணவியர் பங்கேற்றனர். 17-ஆம் தேதி நடைபெற்ற தேர்வில் 9-ஆம் வகுப்பு பயிலும் 35 மாணவர்கள், 10 மாணவியர் பங்கேற்றனர். பிளஸ் 1 பயிலும் மாணவ, மாணவியருக்கு வியாழக்கிழமை (மே 18) தேர்வு நடைபெறுகிறது. இதில் 55 மாணவர்களும், 21 மாணவிகளும் பங்கேற்க உள்ளனர்.
 கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவரஞ்சன் தலைமையில் நடைபெறும் இந்தப் போட்டியை பயிற்சியாளர்கள் ஒருங்கிணைத்துள்ளனர். இந்தப் போட்டிகளில் தேர்வு செய்யப்படும் மாணவ, மாணவியரின் பெயர் பட்டியல் இம்மாத இறுதியில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் வெளியிடப்படும். அவ்வாறு தேர்வு செய்யப்படுவோர் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு விளையாட்டு விடுதிகளில் தங்கி பயிற்சியில் ஈடுபடுவர்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நினைவுச் சின்னம் அமைக்க இடம் ஒதுக்க முன்னாள் ராணுவத்தினா் வலியுறுத்தல்

விழுப்புரம் கோட்ட போக்குவரத்துத் தொழிலாளா் குடும்பங்களுக்கு ரூ. 8.25 கோடி நிதியுதவி அளிப்பு

தலைமறைவாகியுள்ள குற்றவாளிகள் நீதிமன்றத்தில் ஆஜராக அறிவுறுத்தல்

மின்சாரம் பாய்ந்து கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு

தடையை மீறி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினா் கைது

SCROLL FOR NEXT