கிருஷ்ணகிரி

உத்தனப்பள்ளியில் 15 நாள்களுக்கு மின்நிறுத்தம்

உத்தனப்பள்ளி துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் வளர்ச்சிப் பணிகள் நடைபெறுவதையொட்டி 26-ஆம் தேதி முதல் 15 நாள்களுக்கு மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.

தினமணி

உத்தனப்பள்ளி துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் வளர்ச்சிப் பணிகள் நடைபெறுவதையொட்டி 26-ஆம் தேதி முதல் 15 நாள்களுக்கு மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.
 இதுகுறித்து மின்வாரிய செயற்பொறியாளர் எஸ்.கோவிந்தராஜூ, புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
 உத்தனப்பள்ளி துணை மின்நிலயைத்துக்கு உள்பட்ட பகுதிகளில் சாலையின் நடுவே அமைந்துள்ள மின்கம்பங்களை மாற்றுதல் மற்றும் வளர்ச்சிப் பணிகள் ஒரு நாள் விட்டு ஒரு நாள் என 15 நாள்கள் மேற்கொள்ளப்பட உள்ளன.
 எனவே, உத்தனப்பள்ளி, கீரனப்பள்ளி, கனிஞ்சுர், பெரியபேட்டிகானப்பள்ளி, சின்னபேட்டிகானப்பள்ளி, சாமனப்பள்ளி, எட்டிப்பள்ளி, சீபம், மூகாண்டப்பள்ளி, உலகம், உல்லட்டி, பெல்லட்டி, தியாகரசனப்பள்ளி, ஏணுசோனை, அதைச் சுற்றியுள்ள கிராமங்களுக்கும் மே 26-ஆம் தேதி முதல் காலை 10 மணி முதல் மதியம் 2 வரை மின் நிறுத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மையுண்ட கண்கள்... பிரணிதா!

எண்ணத்தின் தழுவல்கள்... சுஷ்ரி மிஸ்ரா

மஞ்சள் பூக்கள்... ரவீனா தாஹா!

நாணத்தில் கண்டேன்... ரித்தி குமார்

புதிய புன்னகை... ஸ்வேதா டோரத்தி!

SCROLL FOR NEXT