கிருஷ்ணகிரி

கார் மோதி கல்லூரி மாணவர் சாவு

கிருஷ்ணகிரி அருகே கார் மோதியதில் பொறியியல் கல்லூரி மாணவர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.

தினமணி

கிருஷ்ணகிரி அருகே கார் மோதியதில் பொறியியல் கல்லூரி மாணவர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
 நாகனப்பள்ளியைச் சேர்ந்த உலகநாதனின் மகன் அனிஷ்குமார் (21), இவர், சென்னையில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் 2-ஆம் ஆண்டு பயின்று வந்தார். இந்த நிலையில் கிருஷ்ணகிரி அருகே தண்டேகுப்பம் வழியாக தனது இருசக்கர வாகனத்தில் சென்றபோது எதிரே வந்த கார் மோதியதில் பலத்த காயம் அடைந்தார்.
 அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசுத் தலைமை மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆனால், அவர் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். கிருஷ்ணகிரி நகர போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வதந்திகளுக்கு சட்ட நடவடிக்கை: ஸ்மிருதி மந்தனாவைத் தொடர்ந்து அறிக்கை வெளியிட்ட பலாஷ் முச்சல்!

ஃபெட் முடிவுக்கு முன்னதாக உச்சத்தை தொடும் தங்கம்!

சக மாணவா்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த மாணவனின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்!

கே.எல்.ராகுலின் கேப்டன்சியை பாராட்டிய முன்னாள் தென்னாப்பிரிக்க வீரர்!

இந்தியாவில் மாசுபாடு அடைந்த நகரம் எது? தில்லிக்கு முதல் இடம் இல்லை!

SCROLL FOR NEXT