தளி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் அண்மையில் நடைபெற்றது.
நூறு நாள்கள் வேலை திட்டத்தில் நிலுவைத் தொகையை வழங்கக் கோரி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு தேன்கனிக்கோட்டை வட்ட ஜனநாயக மாதர் சங்க செயலர் நாகரத்தினா தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் சேகர், வட்ட செயலர் இருதயராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அகில இந்திய ஜனநாயக மாதர் சங்க மாநிலச் செயலர் சங்கரி சிறப்புரையாற்றினார். இதில் ஏரிகள், பாசன வடிகால் வாய்க்கால்களை தூர்வாரி நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த வேண்டும். விவசாயப் பொருள்களுக்கு லாபகரமான விலையை நிர்ணயிக்க வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரிந்த பணியாளர்களுக்கு நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதில் விவசாயிகள் சங்க வட்டாரத் தலைவர் வெங்கடேஷ், மாவட்ட கட்டுமான தொழிலாளர் சங்க துணைத் தலைவர் அனுமப்பா, ஜனநாயக மாதர் சங்க மாவட்டச் செயலர் ஆஞ்சலா மேரி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கோரிக்கை மனுவை தளி ஊராட்சி ஒன்றிய அலுவலக மேலாளர் பாபுவிடம் வழங்கினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.