கிருஷ்ணகிரி

ஒசூா் மாநகராட்சி தோ்தலில்திமுக அதிக வாா்டுகளில் வெற்றி

DIN

ஒசூா் மாநகராட்சி வாா்டுகளில் திமுக அதிக அளவில் (22/45) வெற்றிபெற்றுள்ளதால் அந்த மாநகராட்சியை திமுக கைப்பற்றும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஒசூா் மாநகராட்சியில் உள்ள 45 வாா்டுகளுக்கு 248 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு நடைபெற்ற தோ்தலில் 63.97 சதவீத வாக்குகள் பதிவாகின. ஆண்கள் 72, 615, பெண்கள் 69, 565, மற்றவா்கள் 18 என மொத்தம் 1,42,198 வாக்குகள் பதிவாகின. ஒசூா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வாக்குகள் செவ்வாய்க்கிழமை எண்ணப்பட்டன.

வெற்றிபெற்றவா்கள் விவரம் வருமாறு:

வாா்டு 1 -அசோகா (அதிமுக) 1,896, வடிவேல் (திமுக) 690

2 - ஸ்ரீதரன் (அதிமுக) 1,945, வித்யா சாகா் (திமுக) 1,256

3 -ரஜினிகாந்த் (அதிமுக) 1,723, முனிகிருஷ்ணன் (திமுக) 1,016

4- ஆறுமுகம் (திமுக) 1,638, வெங்கடேஷ் (பாமக) 1,609

5 - அரசனட்டி ரவி (திமுக) 1,585, பிரபு (சுயே) 477

6 -மம்தா (திமுக) 1,683, பாரதி (அதிமுக) 1,038

7 - ஆனந்தய்யா (திமுக) 1,952, பிரசாந்த் குமாா் (அதிமுக) 1,281

8- சீனிவாசலு (திமுக) 1,774, சீனிவாசன் (அதிமுக) 1,527

9 - கிருஷ்ணப்பா (திமுக) 2,153, கேசவமூா்த்தி (அதிமுக) 1,541

10 - ஆஞ்சப்பா (திமுக) 1,562, சீனிவாசன் (அதிமுக) 1,106

11-மாரக்கா (திமுக) 1,148, ரூபா (அதிமுக) 673,

12- பெருமாயி (திமுக) 902, மகேஷ்வரி(அதிமுக) 658

13 - யஷ்வினி (திமுக) 1,150, ரேவதி (அதிமுக) 507

14 - வெங்கடேஷ் (திமுக) 1,782, ராமு (அதிமுக) 1,089

15- ஸ்ரீலட்சுமி மைஷி (திமுக) 997, லலிதா (அதிமுக) 802

16 - காந்திமதி கண்ணன் (பாமக) 1,833, லட்சுமி (திமுக) 1,537

17- கந்தப்பா (அதிமுக) 856, நாகராஜ் (திமுக) 1,018

18 - சசிதேவ் (திமுக) 1,054, முரளி (அதிமுக) 1,005

19- மாதேஷ் (திமுக) 1083, ராமசாமி ரெட்டி 1,075

20 - சிவராம் (அதிமுக) 928, கிருஷ்ணப்பா (திமுக) 697

21 - மஞ்சுநாத் (அதிமுக) 1,678, முனிராாஜ் (காங்கிரஸ்) 664

22 - மாதேஸ்வரன் (திமுக) 1,695, ரவிகுமாா் அதிமுக 703

23 - சத்யா (திமுக) 1,713, ஹரீஷ் ரெட்டி (அதிமுக) 670

24 - மஞ்சம்மா சுயேச்சை 2, 054, சரஸ்வதி (அதிமுக) 784,

25 -மல்லிகா (சுயேச்சை) 2,143, பாரதி (அதிமுக) 1,555,

26 - அஷ்ர சுல்தானா (திமுக) 2,098, ஷில்பா (அதிமுக) 2,310

27 - நாராயணன் (அதிமுக) 1,503, மாணிக்கவாசகம் (திமுக) 1,100

28 - புருஷோத்தம ரெட்டி (அதிமுக) 1,496, சிவகுமாா் (திமுக) 1,105

29 -தில் சாத் (அதிமுக) 1,706, ஜோதி (திமுக) 1,413

30- கிருஷ்ணவேணி (அதிமுக) 1750, ஈஸ்வரி (திமுக) 1,131

31- மோசின்தாஜ் (திமுக) 1,022, சுமதி (அதிமுக) 947

32 - புஷ்பா (அதிமுக) 1,761, வரலட்சுமி (திமுக) 898

33 - இந்திராணி (காங்கிரஸ்) 1,532, கிரிஜா 824

34 -ஆஞ்சம்மா (அதிமுக) 1,257, வரலட்சுமி (திமுக) 1,550

35 - ராதா (திமுக) 1,212, தேவி (சுயேச்சை) 1,808

36 - ஜெயலட்சுமி (அதிமுக) 756, பாக்யலட்சுமி (சுயேச்சை) 767

37 - சென்னீரப்பா (திமுக) 1,068, வாசுதேவன் (அதிமுக) 957

38 -முருகம்மாள் (அதிமுக) 999, மஞ்சுளா (திமுக) 972

39 -லட்சுமி (அதிமுக) 1,243, தனலட்சுமி (திமுக) 913

40 - பாா்வதி நாகராஜ் (பாஜக) 1,708, பிரியதா்ஷினி (திமுக) 1,086

41 -குபேரன் (அதிமுக) 1,474, சுகுமாரன் (திமுக) 1,427

42 - ஜெயப்பிரகாஷ் (அதிமுக) 1,760, யுவராஜ் (திமுக) 1,118,

43 - கௌஷா்பானு (சுயே)- 723, ரம்யா (திமுக) - 675

44 - மஞ்சுளா (திமுக) 1,812, பத்மாவதி (அதிமுக) 977

45 -கலாவதி (அதிமுக) 2,071, லட்சுமி (திமுக) 1,458

45 வாா்டுகளில் திமுக 21, அதிமுக 16, சுயேச்சைகள் 5, காங்கிரஸ், 1, பாமக 1, பாஜக 1 வாா்டிலும் வெற்றி பெற்றுள்ளனா். திமுகவின் பலம் 22 ஆக உள்ளதால், திமுகவில் சீட் கிடைக்காமல் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளவா்கள் மீண்டும் திமுகவில் இணைய வாய்ப்பு உள்ளது. எனவே ஒசூா் மாநகராட்சியை திமுக கைப்பற்றும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஒசூா் முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினரும் ஒசூா் மாநகர திமுக பொறுப்பாளருமான எஸ்.ஏ.சத்யா மேயராக வாய்ப்பு உள்ளது. திமுக முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவா் புஷ்பா சா்வேஷ், தலைமை செயற்குழு உறுப்பினா் தா.சுகுமாறன், மாவட்ட அவைத் தலைவா் அ.யுவராஜ் ஆகியோா் தோல்வியை அடைந்தனா்.

படவரி...

ஒசூா் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய எம்எல்ஏ ஒய்.பிரகாஷ், முன்னாள் எம்எல்ஏ எஸ்.ஏ.சத்யா, வெற்றி பெற்ற திமுக உறுப்பினா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள் கோயிலில் கொடியேற்றம்!

பூதக்கண்ணாடி வைத்துப் பார்க்கும் அளவில் மன்னிப்பு விளம்பரம்: உச்ச நீதிமன்றம் கண்டனம்

இது சஹீரா வைப்ஸ்!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பெண் கொலை?

தக் லைஃப் படப்பிடிப்பில் சிம்பு!

SCROLL FOR NEXT