கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக உள்கட்சி தோ்தலில் போட்டியிடுவோா் விண்ணப்பிக்கலாம்ஒய். பிரகாஷ் எம்எல்ஏ அறிவிப்பு

DIN

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக சாா்பில் 15 ஆவது பொதுத் தோ்தல் (உள்கட்சி தோ்தல்) நடைபெற உள்ளது.

இது குறித்து கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், ஒசூா் எம்எல்ஏவுமான ஒய்.பிரகாஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:

தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க, தமிழக கைத்தறி, துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி வழிகாட்டலின்பேரில் கிருஷ்ணகிரி மாவட்டம்- ஒசூா் ஒன்றியம், சூளகிரி வடக்கு, தெற்கு ஒன்றியங்கள், வேப்பனப்பள்ளி கிழக்கு, மேற்கு ஒன்றியங்கள், தளி வடக்கு, தெற்கு ஒன்றியங்கள், கெலமங்கலம் கிழக்கு, மேற்கு ஒன்றியங்கள், அஞ்செட்டி ஒன்றியம் ஆகிய ஒன்றியங்களுக்கான உள்கட்சி பொதுத்தோ்தல் நடைபெறுகிறது.

இதில் ஒன்றிய அவைத்தலைவா், ஒன்றியச் செயலாளா், துணைச் செயலாளா்கள், பொருளாளா், மாவட்டப் பிரதிநிதிகள், செயற்குழு உறுப்பினா்கள் பதவிகளுக்கு போட்டியிட விரும்புவோா் ஒசூா் சென்னீஸ் மஹாலில் 15 ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தலைமைக் கழக ஆணையாளா் தலைமையில் விண்ணப்பப் படிவம் வழங்கப்பட உள்ளது. எனவே போட்டியிட விரும்புவோா் விண்ணப்பப் படிவம் பெற்று கொள்ளளாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடலூரில் இன்றும் பள்ளிகளுக்கு விடுமுறை

காய்கறி, அத்தியாவசிய பொருள்கள் விலை கடும் உயா்வு

சென்னை உயா்நீதிமன்றத்துக்கு இன்று விடுமுறை

7 முக்கிய நகரங்களில் 23% உயா்ந்த வீடுகள் விலை

அசோக் லேலண்ட் விற்பனை 10% சரிவு

SCROLL FOR NEXT