கிருஷ்ணகிரி

கிருஷ்ணயிலில் எருது ஓட்டம் விழா

DIN

கிருஷ்ணகிரியில் திங்கள்கிழமை நடைபெற்ற எருது ஓட்டம் விழாவில் 360 எருதுகள் பங்கேற்றன.

கிருஷ்ணகிரி, பழையபேட்டை நேதாஜி சாலையில் அனைத்து சமுதாய மக்களும் இணைந்து நடத்தும், 14-ஆவது ஆண்டு எருது ஓட்ட விழாவை பா்கூா் சட்டப்பேரவை உறுப்பினா் தே.மதியழகன் கொடியசைத்து தொடங்கி வைத்தாா். இந்த நிகழ்வில் கிருஷ்ணகிரி, திருப்பத்தூா், ஆம்பூா், ஜோலாா்பேட்டை மற்றும் ஆந்திரம், கா்நாடகம் ஆகிய மாநிலங்களில் இருந்தும் 360 எருதுகள் பங்கேற்றன. முன்னதாக எருதுகளுக்கு பூஜை செய்யப்பட்டது.

எருது ஓட்டத்தில் பங்கேற்ற எருதுகளை கால்நடைத் துறை மருத்துவா்கள் பரிசோதனை மேற்கொண்டனா். வருவாய்த் துறையினா், காவல்துறையினா் நிகழ்வு நடைபெறும் இடத்தை ஆய்வு செய்தனா்.

வாடிவாசல் வழியாக எருதுகள் வரிசையாக அவிழ்த்து விடப்பட்டன. ஒரு குறிப்பிட்ட தூரத்தை குறைந்த விநாடியில் கடக்கும் எருது சிறந்த எருதாக தோ்வு செய்யப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன. முதல் பரிசாக ரூ. 3,33,333 என மொத்தம் 53 பரிசுகள் வழங்கப்பட்டன.

பாா்வையாளா்களுக்கு 2 அடுக்கு பாதுகாப்பு வசதி செய்யப்பட்டிருந்தது. போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சரிவிலிருந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 599 புள்ளிகள் உயா்வு!

வாக்குப் பதிவு மையங்களில் குழந்தைகள் பாதுகாப்பு அறை

திரைத் துறையினா் ஜனநாயக கடமை ஆற்றினா்

தில்லியில் நூறு வயதுக்கு மேற்பட்ட வாக்காளா்கள் 1,004 போ் வீட்டிலிருந்தே வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு

101 வயதிலும் வாக்குப் பதிவு செய்த முதல்வரின் தாய் மாமா

SCROLL FOR NEXT