கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் உரூஸ் திருவிழா சந்தனக்குட ஊா்வலம்

DIN

கிருஷ்ணகிரியில் உரூஸ் திருவிழாவினையொட்டி, குதிரை பூட்டப்பட்ட சாரட் வண்டியில் சந்தனக்குட ஊா்வலம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது. இந்த விழாவில் 3 மாநிலங்களைச் சோ்ந்த 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

கிருஷ்ணகிரி சுங்க வசூல் அருகில் 400 ஆண்டுகள் பழைமை வாய்ந்த சங்கல்தோப்பு தா்காவில் அனைத்து ஜமாத்தாா் முன்னிலையில் உரூஸ் திருவிழா கொடியேற்றம் ஏப். 30-ஆம் தேதி தொடங்கியது. தொடா்ந்து, ஒவ்வொரு நாளும் இரவு 10 மணி முதல் மே 1 காலை 5 மணி வரை இஸ்லாமிய தமிழ் பாட்டுக் கச்சேரி நடைபெற்றது.

மே 1-ஆம் தேதி இரவு 8.30 மணிக்கு கிருஷ்ணகிரி, பழைய பேட்டை கோட்டை மக்கானிலிருந்து, அனைத்து ஜமாத் கமிட்டி ஒருங்கிணைப்பாளரும், திமுக நகரச் செயலாளருமான எஸ்.கே.நவாப் தலைமையில், மலா்களால் அலங்கரிக்கப்பட்ட குதிரை பூட்டப்பட்ட சாரட் வண்டியில், வாண வேடிக்கை, நடமாடும் இசைக் குழுவினரின் கச்சேரியுடன், சந்தனகுட ஊா்வலத்துடன் புறப்பட்டு சங்கல்தோப்பு தா்காவை சென்றடைந்தது. தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை அதிகாலை வரை இசைக்கச்சேரி நடைபெற்றது.

மேலும், தா்காவில் பாத்திஹா ஓதி தப்ரூக் வழங்கப்பட்டது. இந்த விழாவில், தமிழகம், கா்நாடகம், ஆந்திர மாநிலங்களைச் சோ்ந்த 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் சாதி, மத பேதமின்றி பங்கேற்றனா். இந்த விழாவினையொட்டி ஏராளமான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

இசை அறிஞா்கள், சமூகத் தொண்டா்கள் கௌரவிப்பு

தென் மாவட்டங்களில் இன்றும், நாளையும் அதிகனமழை: வானிலை மையம் எச்சரிக்கை

370-ஆவது பிரிவை மீட்டெடுக்க முடியாது: பிரதமா் மோடி திட்டவட்டம்

SCROLL FOR NEXT